ஏதே புதுசா ட்ரை பண்ணுறோம்னு சொல்லி இப்படி ஆகிடுச்சு பாருங்க… மூங்கில் படகில் பயணித்த பெண்களுக்கு நடந்த சம்பவம்…

stick-boat-girls-fall-down-river-goes-viral

படகில் பிரயாணம் செய்வது பலருக்கும் பிடித்தமான ஒன்றாகும். படகு சவாரி குளம், ஏரி, ஆறு, கண்மாய் போன்ற நீர் நிலைகளில் பயணம் செய்ய பயன்படுகிறது. பாலங்கள் மற்றும் போக்குவரத்து சாலைகள் இல்லாத காலத்தில் மக்கள் நீர் நிலைகளை கடந்து செல்ல படகு சவாரியை மேற்கொண்டனர். சில நேரங்களில் இயற்கை சீற்றங்களால் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகினர். அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிகள் பெருகியதால் பாலங்கள் அமைக்கப்பட்டு சாலைவசதிகள் உருவாக்கபட்ட பிறகு படகு சவாரி குறைந்து போனது. தற்போது சுற்றுலா தளங்களில் சுற்றுலா வாசிகளை கவருவதற்கு பயன்படுகிறது.

சுற்றுலாவில் படகு சவாரியானது கைதேர்ந்த நபர்களால் மட்டுமே இயக்கப்படும், மேலும் அனைவராலும் இதில் பயணத்தை மேற்கொள்ள முடியாது. குறிப்பிட்ட நபர்களுக்கு மேலாகவும் பயணம் செய்ய இயலாது. இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் படகு சவாரியின் மூலம் இயற்கையின் அழகை சுற்றி காண்பிப்பார்கள்.

சுற்றுலா காண வந்த கல்லூரி பெண்கள் மூங்கில் படகில் ஏறி செல்ல முனைந்த போது சமநிலை இழந்த மூங்கில் படகு ஒரு பக்கமாக சாய மாணவி ஒருவர் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்தார். மற்ற மாணவிகள் சுதாகரிக்க, இவர் தண்ணீரில் விழுந்ததையடுத்து உடன் இருந்த மாணவிகள் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது….அந்த காணொலியை இங்கே காணலாம்……

You may have missed