வருங்காலத்துல மிக பெரிய ஜிம்னாஸ்டிக் வீரரா வருவான் போலயே… ட்ரெயினில் ஸ்லீப்பர் கோச்சையே தெறிக்க விட்ட சிறுவன்…!

குழந்தைகள் கள்ளம் கபடம் அற்ற கடவுளின் இருதயம் கொண்ட ஜீவன்கள்.குழந்தைகள் வளர வளர அவர்களின் திறன்களும் வளரும். அவர்களின் ஒவ்வொரு செயல்களும் கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.மழலை மொழியில் பேசுவதும், தத்தக்கா…பித்தக்கா என்று நடைபழகுவதும், புதுவித சுவையை ருசிக்கும் போது வெளிப்படுத்தும் உணர்வுகளும், பிடித்த பாடல்களை பாடுவதும், பொம்மைகளுடன் விளையாடும் போது கோபம் கொள்வதும், பெரியவர்கள் போல் நடப்பதும்,பேசுவதும், பிடித்த பாடல்களுக்கு நடனம் புரிவதும் அழகு.

தங்களுக்கு பிடித்த செயல்களில் விருப்பமுடன் செயல் புரியும் குழந்தைகள் இறக்கை இல்லாத தேவதைகள். வீட்டில் பெரியவர்கள் மன அழுத்தத்திலோ அல்லது சஞ்சலத்திலோ இருக்கும் போது அவர்களின் சேட்டைகளால் குழந்தைகள் நம்மை சிரிக்க வைத்து விடுவார்கள். அவர்களின் சுட்டி தனத்திற்கு நம்மை ரசிகர்களாகி விடுவார்கள்.

இங்கே ஒரு சுட்டி குழந்தை ரெயிலில் பிரயாணம் செய்யும் போது பெர்த்தில் இருந்து தானாகவே எவரின் துணையும் இன்றி கீழே இறங்குவதற்கு எந்த வித பயமும் இன்றி நம்பிக்கையுடன் அசால்ட்டாக கீழே இறங்குகிறார். கால்கள் எட்ட வில்லை என்றாலும் கையின் பலத்தால் தொங்கி கொண்டு அவர் நம்பிக்கையுடன் செயல் பட்டது பெரியவர்களுக்கும் பாடமாக இருக்கும். நம்மால் முடியும் என்று தன்னம்பிக்கையுடன் செயல் பட்டால் வெற்றி நிச்சயம் என்பதை இந்த குட்டி ஜிம்னாஸ்டிக் வீரர் மிக அழகாக புரிய வைத்துள்ளார். அந்த காணொலியை இங்கே காணலாம்