ஆங்கில பாடலின் இசையின் தாளத்திற்கு ஏற்ப செம குத்தாட்டம் போட்ட பறவை… என்ன ஒரு டேன்ஸ் பாருங்க..!

பறவைகள் மனித வாழ்வோடு பிரிக்கவே முடியாதவை. இன்று நமக்கு பருவம் தவறாமல் நல்ல மழையெல்லாம் பொழிகிறதே அதற்கு பறவைகளும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.
மரங்களில் இருந்து பழங்களைச் சாப்பிட்டு பறவைகள் போடும் எச்சங்களே மண்ணில் விழுந்து மரமாகிறது. அது மட்டும் இல்லாமல் பறவைகள் பறக்கும் காட்சிகளே நம்மை மிகவும் ரசிக்கவைக்கும். பார்க்கவே அது மிகவும் ரம்மியமாக இருக்கும். இவ்வளவு ஏன் விஞ்ஞான வளர்ச்சிக்கும் கூட பறவைகள் காரணமாக இருந்திருக்கிறது.

பறவையைக் கண்டான்…விமானம் படைத்தான் என பாடல்வரிகளே அதற்குச் சாட்சி. அந்தவகையில் பறவைகளைப் பார்ப்பதே நமக்கு கொள்ளைப் பிரியத்தை ஏற்படுத்தும். அந்தவகையில் பறவைகள் வானத்தில் கூட்டமாகப் பறந்தால் நாமும் ரசித்து பார்ப்போம். அந்தவரிசையில் இங்கே ஒரு பறவையின் இசைத்திறமை நம்மை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது.

வெளிநாட்டில் தான் இந்த பறவை இருக்கிறது. அதன் உரிமையாளர் இந்தப் பறவையின் அருகில் பாடலை ஒலிபரப்புகிறார். உடனே அது பாடலுக்கு ஏற்ப செம க்யூட்டாக ஆடுகிறது. இதோ நீங்களே இந்தப் பறவைக்கு இருக்கும் க்யூட்டான இசைத்திறனைப் பாருங்கள்…