பெண்களுக்கே சவால் விடும் குரங்கு… நான் விளையாடினால், நீங்க காலி… எந்த விளையாட்டுன்னு நீங்களே பாருங்க…!


பெண்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என கிராமத்தில் விளையாடும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஓன்று தாயம் விளையாட்டு. அந்த காலத்தில் பொழுது போக வில்லை எனில் பெண்கள், வயதானவர்கள் இதை விளையாடி மகிழ்வார்கள்.
மகாபாரதத்தில் தாயம் விளையாட்டு கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் தலையெழுத்தையே மாற்றும் அளவுக்கு வலிமை வாய்ந்த விளையாட்டாக இருந்தது. இது சிரியாவில் மிகவும் புகழ் பெற்ற விளையாட்டாக உள்ளது.

தாய விளையாட்டை மொகலாய மன்னரான ஜலாலுதீன் அகப்ர் விரும்பி விளையாடியதாகவும் அதற்காக என்று ஒரு பெரிய கட்டிடம் கட்டபட்டு வீரரை கொண்டு விளையாடியதாக வரலாற்று பதிவுகள் உள்ளன. வரலாறு சிறப்பு மிக்க இந்த விளையாட்டை கிராமங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ்வார்கள் 2 அல்லது 4 பேர் தன்னுடைய காய்களை வைத்து விளையாடுவார்கள். கிராமங்களில் புளிய முத்துக்களை கொண்டும் கற்களை கொண்டும் விளையாடுவர்.

கொரனா காலத்தில் பொழுது போகாத நேரத்தில் அனைவரது வீடுகளிலும் தாயம், பாண்டி போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தார்கள். இது எப்படி விளையாட வேண்டும் என்று வீடியோ பதிப்புகளும் இணையத்தில் காண கிடைக்கிறது. மனிதர்கள் மட்டுமே விளையாடும் இந்த விளையாட்டை குரங்கு ஒன்றும் பெண்களுடன் அமர்ந்திருந்து தாய கட்டையை சுழற்றி ஆடிய காணொலி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த காணொலியை இங்கே பார்வையிடலாம்….
போற போக்க பாத்தா மறுபடியும் தாயகட்டைக்கு வேல வரும் போல இருக்கே… ???????? pic.twitter.com/HgLJb0VAX5
— நல்ல நண்பன் ???? (@N4LLANANBAN) June 24, 2020