41 வயதான நடிகை மீரா ஜாஸ்மினா இது..? தற்போதைய நடிகைகளே மிஞ்சும் போட்டோ ஷூட் புகைப்படங்கள்..!

ஒருகாலத்தில் தமிழக இளைஞர்களின் பேவரட் நடிகை பட்டியலில் இருந்தவர் மீரா ஜாஸ்மின். கேரளத்துப் பைங்கிளியான இவர், தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடித்து வெளியான ரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்

மின்சாரம் என்மீது பாய்கின்றதே என்னும் பாடலுக்கு இவர் நடிகர் மாதவனோடு போடும் ஆட்டம் அப்போது ஒலிக்காத வீடுகளே இல்லை. தமிழிலில் ரன்னுக்கு பின்பு இளைய தளபதி விஜயோடு புதிய கீதை, அஜித்தோடு ஆஞ்சநேயா, மாதவனுக்கு ஜோடியாக ஆயுத எழுத்து என உச்ச நடிகர்களோடு நடித்தார். தமிழ், மலையாளம் என இரண்டிலுமாக 50க்கும் அதிகமான படங்களில் நடித்த மீரா ஜாஸ்மின் கடந்த 2014ல் துபாயை சேர்ந்த சாப்ட்வேர் பொறியாளரான அனில் ஜான் டைட்டசை திருமணம் செய்தார். ஆனால் தம்பதிக்குள் கருத்து வேறுபாட்டால் மீரா ஜாஸ்மின் கணவரை பிரிந்துவிட்டார்.

ஆனால் திருமணத்துக்கு பின்னர் மிகமிக குண்டாக இருந்தார் மீரா ஜாஸ்மின். விவாகரத்து பெற்ற கையோடு ஜிம்முக்கு போய் தன் உடம்பை விறு, விறுவெனக் குறைத்து இப்போது முன்பு நாம் திரையில் பார்த்த மீரா ஜாஸ்மினைப் போலவே தேவதை போல் இருக்கிறார்.இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் அவருக்கு இப்போது 40 வயது என்றால் நம்பவே மாட்டீர்கள். அந்த அளவிற்கு 16 வயது இளஞ்சிட்டு போல இருக்கிறார். இதோ நீங்களே பாருங்களேன்

pic1

pic2

pic3

pic4

pic5