என்ன ஒரு அறிவு பாருங்க… சாதாரண சைக்கிளை பைக் ரேஞ்சுக்கு செமயா மாத்திட்டாங்க பாருங்க..!
என்ன தான் பட்டப்படிப்பெல்லாம் படித்து பெரிய விஞ்ஞானியாக இருந்தாலும், சில நேரங்களில் பாமர மக்களின் விஞ்ஞான அறிவில் அவர்களே கூட சொக்கிப் போவார்கள். அப்படியான ஒரு வெளிநாட்டு வில்லேஜ் விஞ்ஞானியின் சூப்பர், டூப்பர் கண்டுபிடிப்பு உலக அளவில் வைரலாகி வருகிறது.
அப்படி அவர் என்ன கண்டுபிடித்தார்கள் என்கிறீர்களா? முன்பெல்லாம் வீட்டுக்கு, வீடு சைக்கிள் இருக்கும். நம்மவர்களும் தொடர்ந்து சைக்கிள் ஓட்டிவருவார்கள்.சைக்கிள் ஓட்டிய காலத்தில் நம் உடலும் மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் இன்று சைக்கிள் ஓட்டுவதே இல்லாமல் போய்விட்டது. இன்னொன்று, பலரும் இன்று வேகமாக இயங்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம். அப்படி வேகமாக இயங்க வேண்டி இருப்பதாலேயே ஸ்கூட்டர், கார் என மாற வேண்டி உள்ளது.
இங்கேயும் அப்படித்தான். இது வெளிநாட்டு விஷயம் தான். வெளிநாட்டு வாசி ஒருவர் ஒரு சைக்கிள் வைத்திருந்தார். அதில் பேட்டரி உள்பட சின்னதே, சின்னதாக சில பொருட்களை வைத்து மினி ஸ்கூட்டராகவே மாற்றிவிட்டார். சைக்கிளை வழக்கமாக பெடலை மிதித்துச் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால் இந்த இளைஞர் பெடலையே மிதிக்காமல் செம கெத்தாக, ஸ்டைலிஷாக இதில் உட்கார்ந்திருக்கிறார். இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.