உண்மையான பஞ்சுருளி ஆட்டம் இப்படிதான் இருக்குமா…? சினிமாவை மிஞ்சிய காட்சிகள்..!
மெய்சிலிர்க்க வைத்த காந்தாரா பஞ்சுருளி ஆட்டம்……..தென்னிந்திய கிராமங்களின் குலசாமி ஆட்டத்தையும்………….. வட இந்திய மக்களின் மரபுகளையும் ஒத்து இருப்பதாகவும்……….பழமையான பாரம்பரிய மிக்க வழிபாட்டு முறை நாடெங்கும் வேரூயின்றி இருப்பதாக அதிசயித்த இணையவாசிகள்…..
காந்தார திரைப்படம் வெளிவந்த பிறகு அந்த படத்தில் வரும் காட்சிகள் மற்றும் சம்பிரதாயங்கள் தங்கள் கலாசார பழக்கவழக்கங்களில் நடைபெறுவதாகவும், எங்கள் குலசாமியை போன்று இருப்பதாகவும் சமுக வலைத்தளவாசிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் துளு என்ற மொழி பேசும் நாட்டில் உள்ள கலாச்சாரங்கள் மற்றும் தெய்வ வழிபாட்டின் நிகழ்ச்சிகள் மற்றும் உண்மை சம்பவங்கள் வைத்து எடுக்கபட்ட படம் காந்தாரா. இதை பார்த்த அனைவரும் தங்கள் குலதெய்வம் நேரில் வந்தது போன்ற உணர்வில் இருந்ததாகவும், தன்னையும் அறியாது கண்களில் நீர் வந்ததாகவும், இறுதி காட்சியில் பதினைந்து முதல் இருப்பது நிமிடங்கள் கண்களை கூட சிமிட்டாமல் மெய் மறந்து அந்த அனுபவத்தை உணர்ந்ததாகவும் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறியுள்ளனர்.
இந்த படத்தில் வரும் கதை துளு மொழியை தாய் மொழியாக கொண்ட சமூகத்தின் உண்மை பிரதிபலிப்பாகும். கர்நாடகாவின் தட்சிணா மற்றும் உடுப்பி மாவட்டத்தையும், கேரளாவின் காசர்கோடு மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியையும் கொண்டுள்ளது.
புராணங்களின் படி இந்த பகுதி இறைவன் பரசுராமரால் மீட்கப்பட்ட பகுதியென்றும், விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் ஆசீர்வாதத்தால் உருவான பூமி என்றும் இந்த பகுதி கோகர்ண முதல் கன்னியாகுமரி வரை பரவி உள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. துளுவ மொழி பேசும் மக்கள் தெய்வங்களின் நினைவாக பூட்டா கோலா நடனத்தை நிகழ்த்தும் சடங்குகள் நடைபெறுகிறது. மெய்சிலிர்க்க வைக்கும் காந்தார திரைப்பட உண்மை குலசாமி நடனம் தற்போது வைரல் ஆகி வருகிறது……அந்த காணொலி காட்சிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது…..