நான் ஒன்னும் இங்கே மிச்சர் சாப்பிட வரவில்லை… ஹிந்தி பிக் பாஸில் கெத்து காட்டிய குக் வித் கோமாளி ஸ்ருதிகா…

உலகெங்கிலும் பிரபலமான நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இது இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாள போன்ற மொழிகளில் மிகவும் பிரமாதமாக வெற்றி நடை போட்டு வருகிறது. தொடர்ந்து 100 நாட்கள் உள்ளே இருந்து வெற்றி கோப்பையை தட்டும் நோக்கத்தில் ஒவ்வொரு போட்டியாளர்களும் உள்ளே செல்வார்கள்.ஆனால் ஒவ்வெரு போட்டியாளராக வெளிவந்து மீதம் ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இதில் ஹிந்தி பிக் பாசில் தமிழ் நடிகையான குக் வித் கோமாளி ஸ்ருதிகா ஒரு போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார். இதில் இவர் முதலிலே தமிழில் பேசி கெத்து காட்டினார். ஆரம்பத்தில் அவர்க்கு ஹிந்தி ரசிகர்கள் ஆதரவு கொடுக்காதிருந்ததால் நன்றாக விளையாடி தற்போது ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் ஒரு பெண் போட்டியாளருக்கும் ஆண் போட்டியாளருக்கும் இடையில் கருத்து வேறுபாட்டின் காரணமாக சண்டை நிகழ்ந்து பெரும் வாக்குவாதம் நடந்துள்ளது அதையும் தாண்டி கைகலப்பும் நடந்துள்ளது. இதில் இடையில் சென்று ஸ்ருதிகா சமாதானம் செய்துள்ளார். இதனால் சக போட்டியாளர்கள் ஸ்ருதிகாவை கேள்வி கேட்ட நிலையில் அவர் இந்த பெண் கோவத்தில் எது வேண்டுமானாலும் செய்ய வாய்ப்புள்ளது. இதை பார்த்துவிட்டு இருக்க நான் இங்கு வரவில்லை என்றும் நான் இங்கு மிச்சர் சாப்பிட வரவில்லை என்றும் கோபத்துடன் பேசி கெத்தை காட்டிள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறது.

You may have missed