சின்ன மருமகள் ஸ்வேதாவிற்க்கு காதலரா..!! பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காதலருடன் ஸ்வேதா… வைரல் வீடியோ…

விஜய் டீவியில் பிரபலமாக ஓடி கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்றான சின்னமருமகள் தொடரில் கதாநாயகியாக நடித்து வீடு பெண்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தன் வசம் வைத்திருப்பவர் தான் ஸ்வேதா.இவர் முதலில் யூட்டுயூப்-ல் ஷார்ட் பிலிம் மூலம் பிரபலமானவர்.இதைத்தொடர்ந்து இவர் சின்னத்திரை நோக்கி வந்தார்.

இந்த தொடரில் இவர் மிகவும் சாந்தமாக வீட்டில் பெற்றோர்களின் பேச்சுக்கேற்ப டாக்டர் ஆகும் கனவை விட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டு அங்கேயும் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பதுதான் இந்த கதை. இதுவரை கணவரின் சப்போட் உடன் இருந்த தமிழ்செல்விக்கு தற்போது அதுவும் இல்லை இந்த தொடரில். இருப்பினும் தன் கனவிற்காகவும் கணவனின் பாசத்திற்காகவும் போராடி கொண்டிருக்கிறார் தமிழ் செல்வி.

இந்நிலையில் தற்போது ஸ்வேதாவின் பிறந்த நாளே யாரோ ஒரு நபருடன் கொண்டாடி உள்ளார். இதில் அந்த நபர் ஹாப்பி பர்த்டே உசுரே என கேக் ஊட்டி விட்டது ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இருவரும் காதலர்களாக இருக்கலாமோ என கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு தகுந்தாற்போல் ஸ்வேதாவும் கேப்ஷன் போட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

You may have missed