துல்க்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படத்தின் வெற்றி சாதனை… 12 நாட்களுக்குள் இவ்வளவு வசூலா..??

மலையாளத்திரை உலகில் கதாநாயகனாக அறிமுகம் ஆகி தற்பொழுது பான் இந்தியன் ஸ்டாராக வளர்ந்து நிற்பவர் தான் மம்முட்டி அவர்களின் மகனான துல்க்கர் சல்மான்.இவரின் பேச்சுக்கென்றே தனி ரசிகர்கள் உண்டு.தமிழில் இவர் முதலில் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்தார்.

அதை தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் மற்றும் ஹே சினாமிகா ஆகிய மூன்று படங்கள் மட்டுமே தமிழில் நடித்துள்ளார்.இவர் அதிகம் தெலுங்கிலும் மலையாளத்திலும் படங்கள் பண்ணியுள்ளார்.

இவரின் நடிப்பில் தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கி தீபாவளி அன்று வெளியாகி திரையரங்கை கலக்கி கொண்டிருக்கும் படம் தான் லக்கி பாஸ்கர்.இதில் மீனாட்ஷி சவுத்ரி அவர்கள் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் தற்போது 12 நாட்களில் 96 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.100 கோடியை கடந்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.

You may have missed