சமூக வலைதளவாசிகளை கண் கலங்க வைத்த லிட்டில் பிரின்சஸ்… மகளை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் இந்த வலி…!

litle_pricess_cry_nz

வீடு என்பது ஒவ்வொருவருக்கும் தனி உலகம். அந்த உலகம் சமுதாயத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கும். கல்வி ஒருவருக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அன்பு,பாசம், பண்பு, ஒழுக்கம் , நன்னடத்தை…. இவறையெல்லாம் கற்று கொடுப்பது வீடு.

வீடு என்பது தாத்தா,பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, அக்கா , தம்பி போன்ற உறவுகள் ஒரு சேர இருக்கும். இவர்கள் தான் நம்முடைய உலகம். அம்மாவிடம் மகன்கள் உரிமையுடன் எதையும் பேசுவார்கள். அம்மாக்கள் மகள்களிட்ம்…… காட்டும் அன்பை விட ஒரு பங்கு அதிகமாக மகன்களிட்ம் நேசம் கொள்வார்கள். அதற்கு நாம் காரணத்தை தேட முடியாது. அதே போல் அப்பாக்கள் பெண் பிள்ளைகளிட்ம் அதிகம் பாசம் வைத்திருப்பார்கள். மகன்களிட்ம் ஒரு வித கட்டுபாடும், மகள்களிட்ம் சற்று செல்லம் அதிகம் கொடுத்து, எதை கேட்டாலும் வாங்கி கொடுத்து அதிக பாசம் வைத்திருப்பார்கள். அம்மாக்கள் மகன்களிடமும், அப்பாக்கள் மகள்களிடமும் கூடுதலாக பாசம் கொள்வது இயற்கை.

என்னதான் பெண் பிள்ளைகளை பாசமாக வளர்த்தாலும் திருமணத்திற்கு பிறகு அந்த பெண் புகுந்த வீட்டிற்கு செல்வாள் என்பது அவர்களுக்கு தெரியும்.

திருமணம் திருவிழா போன்று நடை பெற்றாலும் திருமணம் முடிந்து மணமகள் புகுந்த வீட்டிற்கு செல்ல வேண்டிய நேரம் வந்ததும் பெண் பிள்ளை வீட்டினர் சோகமாக இருப்பார்கள். அதிலும் அப்பா மற்றும் அண்ணன்மார்கள் மிகுந்த கவலையோடு கண்ணீரை கட்டுப்படுத்தி கொள்வார்கள். இந்த காணொலியில் திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு செல்லவதற்கு முன்பாக அனைவரிடமும் மணப்பெண் விடை பெற்ற போது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் தந்தையும் மகளும் கண்ணீர் சிந்தினர். கண்களை குளமாக்கும் அந்த காணொலி இங்கே காணலாம்……

You may have missed