அடிக்கடி முகத்துக்கு பவுடர் போடுபவரா நீங்கள்.. பவுடர் டப்பா பின் இருக்கும் talc free பார்த்துள்ளீர்களா..?

face-powder-tamil-tips

பவுடர் போடுவது இப்போது நாகரீகக் கலாச்சாரம் என நம் ஆழ்மனதில் நச்சென பதிந்து இருக்கிறது. இன்று ஸ்கின் லோசன், கண்ணுக்கு, மூக்குக்கு,காதுக்கு எனத் தனித்தனியாக வந்துவிட்டது. ஆனால் 90ஸ் கிட்ஸ்களை பொறுத்தவரை அன்றைக்கு இருந்த ஒரே சாய்ஸ் டால்கம் பவுடர்தான்.

இந்த டால்கம் பவுடரின் டால்க் களிமண் கனிமத்திலிருந்து எடுக்கிறார்கள். 2003ம் ஆண்டு பவுடர் தொடர்பாக 13 ஆய்வுகள் நடந்தது. அதன்படி, டால்கம் பவுடர் பயன்படுத்துவது கருப்பை புற்றுநோயை உருவாக்கும் அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இதைத் தொடர்ந்து சுவாசிக்கும்போது நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உண்டு.

மனித உடலில் புற்ருநோய் செல்கள் உருவாக டால்கம் பவுடரும் காரணமாக அமையும் என கூறப்படுகிறது. இந்த ரக பவுடரை அழகு மட்டுமல்லாது, நமைச்சல், வாசனை, சேவ் செய்த பின்பு குளிர்ச்சிக்காக என பல காரணங்களாகவும் பயன்படுத்தத் துவங்கிவிட்டோம்.

இதை வாங்கும்போது நாம் சில விசயங்களைப் பார்த்து வாங்கவேண்டும். குழந்தைக்கு பயன்படுத்தும் பேபி பவுடராக இருந்தால் பித்தலேட், பாராபென் இல்லாதவை என உறுதிப்படுத்திய பின்னே வாங்கவேண்டும். இதற்கு பவுடரின் பின்னால் இருக்கும் அட்டவணையைப் பார்த்தாலே போதும்.இதில் அஸ்பெஸ்டால் டால்க் இல்லாததை பயன்படுத்த வேண்டும். பெரியவர்கள் ஆனாலும் பேபி பவுடரையே யூஸ் செய்வதும் ரொம்ப தப்பு. வயதுக்கு ஏற்ற பவுடருக்கு மாறிவிட வேண்டும்.

You may have missed