இந்தியாவின் ரைட் சகோதரர்கள்…. எளிய முறையில் மிதிவண்டி கார் வாகனத்தை உருவாக்கி அசத்திய சிறார்கள்..!


உலகம் நவீன கண்டுபிடிப்புகளால் கைக்குள் அடங்கி விட்டது. உலகில் நடக்கும் எந்த தகவலையும் இருந்த இடத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். தற்போது 2கே-கிட்ஸ்களின் உலகம் விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்று உலகம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது
தொழில்நுட்ப வளர்ச்சிகள் வளரும் போது மனிதர்களின் உடல் பலம் கொண்ட வேலைகள் குறைக்கப்பட்டு அறிவு சார்ந்த வேலை வாய்ப்புகள் பெருகிவருகிறது. கல்வி மட்டுமே உலகத்தின் வளர்ச்சிக்கும், தனி மனித வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படுகிறது. மக்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வது கல்வி மட்டுமே. நாகரிக முன்னேற்றம் என்பது அறிவியல் சார்ந்தே இருக்கிறது.

டிஜிட்டல் உலகில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் நாம் எங்கும் செல்லாமல் தேவையான பொருட்களை வீட்டில் இருந்தே வாங்கிக்கொள்ளலாம். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு வாகனங்களையும், பேருந்துகளையும், ரெயில் மற்றும் வானூர்திகளையும் பயன் படுத்திவருகிறோம்.
ஒரு காலத்தில் மிதிவண்டியின் பயன்பாடு பெருமளவில் இருந்தது. மிதிவண்டியில் பயணிக்கும் போது நன்றாக நாம் உணர்வோம். மேலும் சிறந்த உடற்பயிற்சியாகவும் இருந்தது. மிதி வண்டியில் ஒருவர் அல்லது இருவர் பயணம் செய்ய முடியும். மேலும் மழை காலங்கள் மற்றும் கோடை காலங்களில் பயணம் மேற்கொள்வது சிரமமாக இருக்கும். தற்போது உடற்பயிற்சிக்காக இளைஞர்களால் பயன்படுத்தப்படுகிறது. கிராமங்களில் வயதானவர்கள் அருகில் இருக்கும் கடைகளுக்கு செல்வதற்கும் , தம் நண்பர்களை சந்திப்பதற்காகவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

கேரளாவை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் மூன்று சக்கர மிதிவண்டி ஒன்றை உருவாக்கி அதன் மேல் கூரை அமைத்து சாலையில் பயணம் செய்தது வைரல் ஆக மாறியுள்ளது. கோடை காலங்களிலும், மழை காலங்களிலும் சிரமம் இன்றி எளிதாக பிரயாணம் செய்ய ஏதுவாக அமைந்த புது வித அமைப்பை கொண்ட மிதிவண்டி சமூக வலைத்தளத்தில் அனைவரின் ஆதரவை பெற்று வைரல் ஆகி வருகிறது. மாற்றி யோசித்து தங்களின் கற்பனையை நிஜமாக்கிய சிறுவர்களின் கண்டுபிடிப்பை இணையவாசிகள் பாராட்டி கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்த காணொலியை இங்கே காணலாம்……