டேய் வாங்கடா சறுக்கி சறுக்கி விளையாடலாம்… சிறு குழந்தை போல் ஆட்டுக்குட்டி செஞ்ச செயலை பாருங்க…

cute-baby-goatlamb-playing-slides

பொழுது போக்கு பூங்காக்கள், கடற்கரை பூங்கா போன்ற இடங்களுக்கு செல்லும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அங்கு பொருத்தப்பட்டிருக்கும் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, சீ-சா, மங்கி பார் இன்னும் பிற விளையாட்டு பொருட்களும் குழந்தைகள் விளையாட அமைக்கப்பட்டிருக்கும். இதில் பெரியவர்களும் அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு பொருட்க்களில் அமர்ந்து விளையாடுவார்கள். பொதுவாக ஊஞ்சல் ஆடுவது அனைவருக்கும் விருப்பமான ஓன்று, ஊஞ்சலில் பெரியவர்களும் விளையாடுவதை பார்த்திருப்போம். விளையாட்டு திடலுக்கோ, பூங்காகளில் அமைக்கப்பட்டிருக்கும் விளையாட்டு பொருட்க்களிலும் வயதானவர்கள் விளையாடுவதை பார்க்கலாம்.

சிறு வயதில் விளையாட முடியாததை பெரியவர்கள் ஆன பிறகும் அந்த விளையாட்டு பொருட்களை பார்த்தால் பெரியவர்களுக்கு விளையாட தோன்றும். எனினும் ஒரு சில மனிதர்கள் கூச்ச சுபாவத்தால் விளையாடுவதை தவிர்த்து விடுவார்கள்.மற்றவர்கள் விளையாடுவதை ஆனந்தமாக வேடிக்கை பார்ப்பார்கள். சறுக்கி விளையாடும் விளையாட்டை அனைவரும் விளையாட விரும்புவார்கள். சுவைங்க்…….என்று சறுக்கி வரும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும். மீண்டும் மீண்டும் விளையாட தோன்றும் ஒருவர் பின் ஒருவர் வரிசையாக விளையாடும் போது சுவாரஸ்யமாக இருக்கும். இதை மனிதர்கள் மட்டும் விரும்புவதில்லை…….சில விலங்குகளும் விரும்பி விளையாடும். குரங்குகள் விளையாடி பார்த்திருக்கலாம்….ஆனால் ஆட்டுக்குட்டி விளையாடி பார்த்திருக்கிறீர்களா……..

இங்கே ஒரு புத்திசாலியான ஆட்டுக்குட்டி படிக்கட்டில் கட்ட பட்டிருக்கும் சறுக்கு போன்ற திண்டில் சறுக்கி சறுக்கி…… விளையாடுகிறது. இது 90-ஸ் கிட்ஸ்களுக்கான பிடித்தமான விளையாட்டு ஆகும். 90-ஸ் கிட்ஸ்களின் விருப்பமான சறுக்கு விளையாட்டை ஒரு குட்டி ஆடு விளையாடி இணையத்தை கலக்கி வருகிறது. மற்ற ஆடுகளை விட துடுக்குத்தனமாகவும் புத்திசாலித்தனமாகவும் ……..சறுக்கி விளையாடும் விளையாட்டை விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த காணொலியை இங்கே காணலாம்.

You may have missed