அப்பாவிற்கு இணையாக ஒரு உறவு உண்டு என்றால் அது அண்ணன் தான்… தங்கையின் பாதுகாப்பிற்காக இந்த அண்ணன் செஞ்ச செயலை பாருங்க…

brother-care-child-bicycle-news-trnds

ஒரு குழந்தையை பெற்றோர்கள் அன்பாகவும், பாதுகாப்பாகவும் வளர்ப்பார்கள். அன்னையானவள் குழந்தைக்கு உணவினை ஊட்டி,நல்ல பழக்கவழக்கங்களை கற்று கொடுத்து வீட்டிற்கும், சமுதாயத்திற்கும் நல்ல குழந்தையாக வளர்ப்பார்கள். தந்தையானவர் குழந்தைகளின் எதிர் காலம் சிறப்புற வேண்டி நல்ல கல்வி, ஆரோக்கியமான சிந்தனைகளை கற்று கொடுத்து பாதுகாப்பாக வளர்ப்பார்கள். குழந்தைகளுக்கு தேவைப்படும் வசதிகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுப்பார்கள். ஆண், பெண் என்று இரு குழந்தைகள் இருக்கும் வீட்டினில் தந்தை மகளிடத்தில் கூடுதல் அன்பு காட்டுவதும், அன்னையானவர் மகன்களிடத்தில் கூடுதல் அக்கறையோடு நடந்து கொள்வதும் உலகம் அறிந்த உண்மை.

லிட்டில் பிரின்சஸ்களுக்கு தந்தை தான் ஹீரோ. அவருக்கு இணையாக யாரையும் கருதமாட்டார்கள். பெற்றோரிடத்து உடன் பிறந்தவர்கள் செய்யும் சிறு தவறுகளை போட்டு கொடுப்பதே முக்கிய வேலையாக இருக்கும். லிட்டில் பிரின்சஸ் இருக்கும் வீடுகளில் அண்ணன் தங்கை சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. இவர்கள் டாம் அன்ட் ஜெரியாக வீட்டில் நடந்து கொண்டாலும், வெளியில் தங்கள் அண்ணன்களை விட்டு கொடுக்க மாட்டார்கள். அதே போல் தன்னுடைய தங்கைக்கு ஒரு பிரச்சனை என்றால் அண்ணன் தந்தை போல் பாதுகாப்பாக இருப்பார்.

இங்கு ஒரு குட்டி பிரின்ஸ்ஸை தனது சைக்கிளில் பாதுகாப்பாக அழைத்து செல்ல அண்ணன் செய்த காரியம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சைக்கிளில் அழைத்து செல்லும் போது தங்கை கீழே விழாமல் இருப்பதற்காகவும், கால்கள் மிதிவண்டி சக்கரத்தில் மாட்டி கொள்ளாமல் இருப்பதற்காகவும் சகோதரன் ஒரு துணியால் கால்களை மிதிவண்டியோடு இணைத்து கட்டிய காட்சிகள் அண்ணனானவன் அன்னையாகவும், தந்தையாகவும் அவதாரம் எடுப்பார் என்று உணர்த்தியுள்ளார், இந்த சிறுவன். சிறுவனின் தங்கை பாசம் நம்ம வீட்டு பிள்ளை சிவகார்திகேயனையும் மிஞ்சி விட்டார் என்று இணையவாசிகள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். பாசமலர் குழந்தைகளின் காட்சிகள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது….அந்த காணொலியை இங்கே காணலாம்…..

You may have missed