ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய இருவர்… சாதுரியமாக செயல்பட்ட டிரக் ஓட்டுனரின் செயல்…

brilliant-driver-save-two-man-life-viral-video

நாட்டின் முக்கிய பகுதிகளையும், கிராமங்களையும் இணைக்கும் பகுதியாக சாலைகள் இருக்கின்றன. இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து சாலைகள் பயணங்களை சிரமமின்றி எதிர்கொள்வதற்கும், கிராமத்தில் விளையும் விவசாய பொருட்களை நாடுமுழுவதும் கொண்டு செல்லவும் போக்குவரத்து வசதிகள் இன்றியமையாததாகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கு காரணியாக இருக்கும் போக்குவரத்து சாலைகள் தற்போது நான்கு வழி சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளது. சாலைகள் இந்தியா முழுவதும் 5.89 மில்லியன் சாலைகளை இணைகின்றன. உலகில் இரண்டாவது பெரிய சாலைகள் போக்குவரத்து கொண்ட நாடாக திகழ்கிறது. தகுதி வாய்ந்த பொறியாளர்களை கொண்டு 1934-ம் ஆண்டு இந்தியன் ரோட் காங்கிரஸ் நிறுவப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகள் ‘ NH’ என்ற குறியீட்டின் மூலம் குறிக்கப்படுகின்றது.

இந்தியாவில் வாகனநெருக்கடிகள் தினம் தினம் சந்திக்கும் ஒரு சவலாக இருக்கிறது. இதனை தவிர்க்க பல வழிமுறைகளை அரசு எடுத்து வருகிறது. அது போல் தினம் தினம் சாலை விபத்துகள் அரங்கேறி வருகிறது. இது மக்களுக்கு பெரும் இழப்பாகவும், உயிர் மற்றும் உடமைகளுக்கு சேதாரம் விளைவிக்கும் அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது. முக்கியமாக வேகம், சாலை விதிகளை மீறுதல், பராமரிப்பு இல்லாத வாகனங்கள், ஓட்டுனரின் கவன குறைபாடு, மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டுதல் போன்றவை காரணமாக இருக்கிறது. சில முக்கிய விதி முறைகளை பின்பற்றினால் சாலை விபத்துகளில் இருந்து தப்பிக்காலம் என்று அரசு விளக்கியுள்ள காரணிகள்……..

நோ என்ட்ரி போன்ற பலகைகள் பொருத்த பட்டிருக்கும் சாலையில் பயணம் செய்யாமல் இருத்தல், சாலையில் பொருத்தப்பட்டிருக்கும் ட்ராபிக் விளக்குகளை கவனித்தல், சாலையில் இடது பக்கத்தில் பிரயாணம் செய்தல், வளைவில் திரும்பும் முன் அதற்கான குறியீடுகளை தெரிவித்தல் அல்லது கையால் சைகைகள் தெரிவித்தல், வாகனம் ஓட்டும் போது அலைபேசியை தவிர்த்தல், மது பானம் அருந்தி கொண்டு வாகனம் ஓட்டுவதை தவிர்தல், பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்ளுதல், வாகனங்களை இயக்குவதற்கு முன் வாகன
பரிசோதனை செய்தல், வாகனத்தை ஓட்டும் போது கவனமாக ஓட்டுதல், ஸீப்ரா க்ராஸிங்க் பகுதியில் கவனமாக வாகனத்தை இயக்குதல், மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்குதல், தூர பயணங்களில் தொடர்ந்து வாகனத்தை இயக்கமல் ஓய்வுவெடுத்து இயக்குதல் போன்றவை ஓட்டுநர் கடைபிடிக்க வேண்டிய முக்கிய காரணிகளாகவும்.

இங்கு நான்கு வழி சாலையில் ட்ரெக் ஓன்று பயணம் செய்யும் போது இரு சக்கர வாகனத்தில் பிரயாணம் செய்த இருவர் எதிர்ப்பாராத விதமாக குறுக்கேவர சுதாகரித்து கொண்ட வாகன ஓட்டுநர் வாகனத்தை நொடி பொழுதில் நிறுத்தி இருவரின் உயிரையும் காப்பாற்றிய ட்ரெக் ஓட்டுனரின் சாதுரியத்தை கண்டு இணையவாசிகள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த காணொலி காட்சிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

You may have missed