அடேங்கப்பா இப்படியொரு ஒரு பிரம்மாண்ட கப்பலா..? அவ்வளவு கார்களை எப்படி ஏத்துறாங்க பாருங்க…!

  இந்த உலகில் சிலருக்கு சாதாரணமாகத் தெரியும் விசயம், பலருக்கு அசாதாரணமாக தோன்றும். அந்தவகையில் கப்பலில் அதிலும் இந்தக் கப்பலில் வேலைசெய்வோருக்கு மட்டுமே இது சாதாரணமாகத் தெரியும். மற்றவர்கள் இதில் ஆச்சர்யத்தின் விளிம்பிற்கே சென்றுவிடுவார்கள். ஆம் அப்படியான ஒரு விசயம் தான்!

 பைக், கார், ஆட்டோ, ரயில் இவ்வளவு ஏன் விமானப் பயணம் கூட பலரும் செய்திருப்போம். ஆனால் கப்பல் வழியான பயணம் அனைவருக்கும் வாய்ப்பது இல்லை. அப்படியே வாய்த்தாலும் பயணிகள் கப்பலில் தான் சென்றிருப்போம். சரக்குக் கப்பலில் என்ன இருக்கிறது? என்ன நடக்கிறது? என்பதைக்கூட நாம் பார்த்திருக்க மாட்டோம். 

  கப்பல் பயணம் பலருக்கு இஷ்டமானதும் கூட… இவ்வளவு ஏன் கன்னியாகுமரி கடல்நடுவே விவேகானந்தர் பாறைக்கு படகில் செல்லலாம் என்பதற்காகவே கன்னியாகுமரிக்கு கிளம்பி வருபவர்களும் உண்டு. கடல் பயணம் அவ்வளவு சீக்கிரம் பலருக்கும் வாய்ப்பது இல்லை. அதிலும் இப்படியெல்லாம் கூட கப்பலில் இருக்குமா எனக் கேட்கும் அளவுக்கு பல விசயங்கள் கப்பலில் இருக்கும். 

 இதோ இங்கேயும் அப்படித்தான் ஒரு பிரமாண்டமான கப்பல் இருக்கிறது. அதை பெரிய சைஸ் மைதான என்றே சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு அந்த கப்பலுக்குள் புதுப்ப்புது  கார் என வரிசை கட்டுகிறது. ஆனால் நிச்சயமாக இப்படி ஒரு கப்பலை வாழ்க்கையிலேயே பார்த்திருக்க மாட்டீர்கள். காரணம் வெளிநாட்டில் உற்பத்தியாகும் கார்கள் விற்பனைக்காக இந்த பிரமாண்ட கப்பலின் வழியாகவே பல நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். 

You may have missed