இந்த வயதிலும் மனதையும் உடலையும் கட்டுக்குள் வைத்திருக்கும் வயதான இளைஞன்…. சர்க்கஸ் வீரருகே கற்று தரும் தைரியம்.
உடல் உழைப்பு குறைந்து வருவதாலும்…….நொறுக்குத்தீனிகள் கொறித்து வருவதாலும்……பதப்டுத்தப்பட்ட உணவு வகைகளையும், துரித உணவுகளை அதிகம் உண்பதாலும்…….மேற்கத்திய உணவுகளான பிஸ்ஸா, பர்கர் போன்ற உணவுகளுக்கு அடிமையானதாலும்……தற்போது உள்ள குழந்தைகள் உடல் பருமன், ஊட்டசத்து குறைபாடு, நோய் எதிர்ப்பாற்றல் இல்லாமை போன்றவை பல வித நோய், நொடிகளுக்கு ஆளாக இந்த வகை உணவுகள் காரணமாக அமைகிறது. இதனால் இளம் வயதிலேயே சில நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர்.
நோய் தடுப்பு மருந்துகள் அதிகம் எடுப்பதாலும் உடல் பலவீனம் அடைகிறது. இயற்கையாகவே நம் உடல் தன்னை புதுப்பித்து நோய் நொடிகளில் இருந்து காப்பாற்றி கொள்ள நம் நாடுகளில் விளையும் உணவு பொருட்களில் இருக்கிறது. அதை விடுத்து இயற்கைக்கு மாறாக செயல்பட ஆரம்பிக்கும் போது ஒரு சில நோய்களால் அவதிப்பட்டு வாழ்நாள் முழுக்க மருந்து மாத்திரைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நம் முன்னோர்கள் கண்ட முது மொழி……நோய்நொடிகள் இல்லாதிருந்தால் வாழ்க்கை முழுக்க நம் சொந்த காலில் நிற்கலாம்……மேலும் வாழ்க்கையில் கடமைகள் முடிந்த பிறகு அவரவருக்கு பிடித்தமான இடங்களுக்கும்…..பிடித்தமான விஷயங்களிலும் ஈடுபடலாம்……
அளவான ஊட்டச்சத்து மிகுந்த சாப்பாடு…….உடற்பயிற்சி, நொறுக்குதீனி , மேற்கத்திய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளாதிருத்தல் போன்றவற்றை மேற்கொண்டு முன்னோர்களினுடைய இயற்கை சார்ந்த பழக்கவழக்கங்களை மேற்கொண்டால் நம் வாழ்கை ஆரோக்கியமானதாக இருக்கும்.
அன்றைய காலங்களை போல் உடல் உழைப்பு இல்லாததாலும், மன அழுத்தம் தரும் சூழ்நிலைகளும், வேலைப்பளுவும் இல்லாததும் ஒரு காரணம் அவர்கள் ஆரோக்கியமான வாழ்வை மேற்கொண்டதற்கு. வாழ்கை வாழ்வதற்கே உடல் ஆரோக்கியமாக இருந்தால் நினைத்தபடி நம் வாழ்வை அமைத்து கொள்ளலாம் என்று முதியவர் ஒருவர் செயலில் உணர்த்தியிருக்கிறார். வாழ்வில் ஆரோக்கியம் ஒன்றே போதும் பணமோ, பங்களாவோ, சொகுசு காரோ தேவையில்லை சைக்கிள் ஒன்றே போதும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நகர்த்த………என்று நிரூபித்திருக்கிறார் முதியவர் ஒருவர்……நகைசுவையோடு வாழ்வின் ரகசியத்தை உணர்த்திய முதியவரின் காணொலி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது….