தாயின் தியாகத்திற்கு மகன் ஆற்றிய தொண்டு…. பேங்க் வேலையை ராஜினாமா செய்து விட்டு 72 வயது தாய்க்கு செய்த செயல்..!

தாயின் தியாகங்கள் பின்னால் இருக்கும் அன்பும், பொறுப்பும், கடமையும் மகன்களுக்கோ அல்லது மகள்களுக்கோ தெரியாது. அவர்கள் பின்னாட்களில் தந்தை, தாய் ஆன பிறகு அனுபவத்தின் மூலம் உணர்ந்து கொள்வார்கள். தங்களுடைய தாய் தந்தையர்….. எவ்வளவு அரும்பாடுபட்டு வளர்த்திருப்பார்கள் என்று…… அப்போது உணர்ந்து கொள்வார்கள்…

மைசூரை சேர்ந்த தட்சணாமூர்த்தி கிருஷ்ணகுமார் என்பவர் தன்னுடைய தாயை ஸ்கூட்டரில் 60,000கிலோ மீட்டர் தூரம் சுற்றுலாவிற்கு அழைத்து சென்றுள்ளார். தனது தாய் பத்து பேர் கொண்ட கூட்டு குடும்பத்தில் நாள் முழுக்க உழைத்து கொண்டிருப்பார். நான்கு சுவற்றை தவிர வெளியுலகமே அறிந்திறாதவர். அருகில் உள்ள கோவில் குளங்களுக்கு கூட செல்லாமல் வருட கணக்கில் குடும்பத்திற்காகவே அல்லும் பகலும் உழைத்து அவர்கள் நலனில் அக்கறை கொண்ட ஜீவனாக தனது வாழ்க்கை பயணத்தில் அனைத்து பக்கங்களையும் தனக்காக சிந்திக்காமல் தன் குடும்பத்திற்காகவே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய தந்தை சில வருடங்களுக்கு முன் காலமானார்.

கிருஷ்ணகுமார் அவர்கள் தனது தாய் சுதாரத்தினத்திடம் மைசூரில் பிரசித்து பெற்ற புனித தலங்களை பற்றி பேசிய போது தாம் அந்த பகுதிகளுக்கு சென்றதில்லை என்று பதிலளித்துள்ளார். மைசூரை தாண்டி இது வரை வெளியே பிரயாணம் மேற்கொண்ட தில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் தன் தாயை இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற இடங்களுக்கு அழைத்து சென்று காண்பிக்க வேண்டும் என்று சங்கல்பம் பூண்டு அந்த பணியை 2018-ல் ஆரம்பித்து தொடர்ந்து புனித தலங்களுக்கு தாயை உடன் அழைத்து சென்று வருகிறார்.

முதன் முதலாக மைசூரில் போஹாடி என்ற சொந்த ஊரில் இருந்து ஆரம்பித்த இந்த பயணத்தை அருண்சல பிரதேசம், இந்திய எல்லையில் உள்ள நாடுகளான நேபால், பூட்டான், மற்றும் மியான்மர் போன்ற இடங்களுக்கு சென்று வந்துள்ளார். 39 தாவது வயதில் தனது பேங்க் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தாயை இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களுக்கு அழைத்து சென்று காண்பிப்பதே தன்னுடய நோக்கம் என்றும் அதனால் 2018-ல் ‘மாத்ரு சேவா யாத்ரா’ என்ற பயணத்தை துவக்கி அனைத்து பகுதிகளைகளில் உள்ள கோவில்களை தரிசனம் செய்த பிறகே வீடு திரும்ப வேண்டும் என்று உறுதியோடு பிரயாணத்தை மேற் கொண்டு வருகிறார்கள். இதனால் அவர்கள் இந்தியா முழுவதும் பிரபலம் ஆயினர். மகிந்திரா மோட்டார்ஸ் நிர்வாக அதிகாரி ஆனந்த் மகிந்திரா அவர்கள் தன்னுடைய வலைத்தள பக்கத்தில் இந்த செய்தியை பகிர்ந்து ‘கிரேட் சன் ‘ என வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.

கோவில் ஸ்தலங்களுக்கு செல்லும் வழியில் உள்ள அனைத்து இயற்கை எழில் மிகுந்த காட்சிகள் ஒவ்வொன்றயும் ரசிப்பதாகவும், தன்னுடைய தந்தையின் 20 வருடம் பழமை வாய்ந்த பஜாஜ் ஸ்கூட்டரில் பிரயாணம் மேற்கொண்டு வருவதாகவும் ஒரு நாள் கூட தொழில் நுட்ப கோளாறு ஆக வில்லை என்றும் ஒரே ஒரு முறை மட்டுமே பஞ்சர் ஆகி விட்டதாகவும் அதனையும் சரி செய்து அதே வாகனத்தில் தரிசனத்துக்காக செல்வதாகவும், தந்தையின் ஆசி இருப்பதால் மட்டுமே இது சாத்தியம் என்றும், தந்தையும் உடன் பிரயாணம் மேற் கொள்வது போன்ற உணர்வு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை மேற் கொண்ட பயணங்களில் தாம் இது வரை ஹோட்டல்களிலோ, விடுதிகளிலோ அறை எடுத்து தங்கியதில்லை என்றும், கோவில் மடங்களில் மட்டுமே தங்கியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் அந்த சுற்று வட்டார மக்களிடம் கேட்டு அறை எடுத்து தங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். பயண செலவுகளுக்கு தாம் இதுவரை கடின உழைப்பின் மூலம் சேர்த்து வைத்த தொகையை செலவழித்து வருவதாகவும், யாரிடமும் இருந்து பணம் பெற்றதில்லை என்றும் தம்முடைய தாயை சொந்த செலவில் மட்டுமே அனைத்து இடங்களுக்கும் அழைத்து செல்வது தம்முடைய விருப்பம் என்றும் தெரிவித்திருக்கிறார். காலை மற்றும் மாலை என இரு வேலை மட்டுமே உணவு எடுத்து கொள்கிறார்கள். டீ மற்றும் காபி போன்ற பானங்கள் தவிர்த்து வருகிறோம் என்று செய்தி நிறுவங்களுக்கு தெரிவித்துள்ளார்.

72 வயது தாயுடன் 44 வயது கிருஷ்ணகுமார் மகன் 60,000 கிலோமீட்டர் பிரயாணம் மேற் கொண்டு வந்த இவர்கள் தற்போது கேரளாவில் உள்ள புகழ் மிக்க புனித தளங்களை தரிசனம் செய்து வருகிறார்கள். 2015 தந்தை காலமாகி போன பிறகு தாய் தனியாக வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரே மகன் கிருஷ்ணகுமார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது அம்மா பெயரில் வேலை செய்து சேர்த்து வைத்த பணத்தில் பிரயாண செலவுகளை ஈடுகட்டி வருகிறார். இவரது புகழ் தற்போது இந்தியா முழுக்க பிரபலம் அடைந்துள்ளது. இந்திய பிரபலங்கள் பலரும் இவரின் அர்ப்பணிப்பை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தாயை போல் ஒரு கோவிலுமில்லை…..தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று வாழ்ந்து வரும் கலியுக கிஷ்ணகுமார் என்று இணையவாசிகளும் பாராட்டி வருகின்றனர்.

You may have missed