பாசத்தை பொழியும் சிறுமி… விலக மறுக்கும் குட்டி குரங்கு… இறுதியில் என்ன நடந்ததென பாருங்க…!

அன்பு, பாசம், அக்கறை,மனிதாபிமானம் போன்ற உணர்வுகள் மனிதர்களை மனிதர்களாக அங்கீகரிக்கும் உணர்வுகள். எந்த விதமான விலங்குகளை வீட்டில் வளர்த்தாலும் அவைகள் நம்முடன் அன்புடன் நெருக்கி பழகும் இயல்புடையது. வீட்டினில் வளர்க்கும் விலங்குகளை மனிதர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்று பாவித்து வளர்ப்பார்கள். சிறுவர்கள் இருக்கும் வீடுகளில் அந்த விலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக தடுப்பூசிகள் செலுத்து சுத்தமாக வைத்து கொள்வார்கள்.

பொதுவாக வீடுகளில் நாய், பூனை, முயல், பசுகள், கிளிகள், மைனாக்கள், புறாக்கள் போன்ற அமைதியான குணம் கொண்ட விலங்குகளையும், பறவைகளையும் வளர்ப்பதை பார்த்திருப்போம்.

இங்கே ஒரு வீட்டில் குரங்குகளை வளர்ப்பதை காணலாம். ஒரு குட்டி குரங்கு அந்த வீட்டில் உள்ள சிறுமியை தனது தாயாக கருதி அவளிடம் பாசத்தை பொழிகிறது. தாயுடன் ஒட்டி கொள்வது போல் சிறுமியிடமும் ஒட்டி கொண்டு விலக மறுக்கிறது. எவ்வளவு தான் சிறுமியிடம் இருந்து பிரித்தாலும் எவ்வாறாவது அந்த சிறுமியிடம் மீண்டும்…. மீண்டும்…. ஒட்டி கொள்கிறது. சிறுமியின் தயானவர் தாய் குரங்கினை வைத்து சிறுமியிடம் பிரிக்க முயற்சித்தாலும் சிறுமியிடம் மட்டுமே பாசமுடன் பழகுகிறது. தாய் குரங்கானது இதை பார்த்து சந்தோஷத்தில் அங்கும் இங்குமாக குதித்து….. குதித்து…. மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.

அந்த வீட்டினில் இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளை கவனமுடனும், அக்கறையுடனும் வளர்ப்பார்களோ அதே போன்று சிறிய மெத்தை, விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை குரங்குகளுக்கு கொடுத்து பராமறிக்கின்றனர். சமூக வலைதளவாசிகள் இப்படியும் ஒரு பாசமான குடும்பமா….. என்று வியந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

You may have missed