இந்த புகைப்படத்தை பார்த்து இது யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்…. அனைவருக்கும் தெரிந்த பிரபலம் தான்….

குடும்பப்பாங்கான ரோல்களில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் தான் தேவயானி. இவரின் இயற்பெயர் சுஷ்மா. திரைப்படத்தில் நடிப்பதற்காக தனது பெயரை மாற்றிக்கொண்டார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார். 80,90 கிட்ஸ்களின் favourite என்றே இவரை சொல்லலாம். 1997ல் சரத்குமாருடன் இவர் இணைந்து நடித்த சூரிய வம்சம் படம் இன்று வரை அனைவருக்கும் தன்னம்பிக்கையை தந்து ஊக்குவிக்கும் படமாக உள்ளது.

திரைப்படங்கள் என்று மட்டும் இல்லாமல் நாடகங்களிலும் நடித்து தனது இடத்தை இன்றும் தக்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறார். அன்றைய காலத்தில் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட கோலங்கள் என்ற நாடகத்தில் ஹீரோயின்னாக நடித்தார். இந்த தொடர் நல்ல வெற்றியையும் பெற்றது. 2001ல் இவர் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இனியா மற்றும் பிரியா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தற்போதும், ஜீ தமிழில் ஒளிக்காட்டப்படும் புது புது அர்த்தங்கள் என்ற நாடகத் தொடரிலும் நடித்து வருகிறார்.

இவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. அதை பார்த்தால் தேவயானி இன்றும் அப்படியே இருக்கார் என்றே சொல்லலாம். மிகவும் க்யூட்டாக இருக்கிறார்…..

pic1

pic2