பைக் ல லிப்ட் கேட்டு பாத்திருப்போம் ஆனா ட்ரெயின்ல லிப்ட் கேட்டு பாத்திருக்கிங்களா..? இந்தியாவில் தான் இப்படி வித்தியாசமான சம்பவங்கள் நாடக்கும் போலயே….

நம் எல்லோரையும் ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு கொண்டு சேர்ப்பது வாகனங்கள் தான். சில நேரங்களில் நாமே பக்கத்திற்கு எங்காவது நடந்து செல்வது உண்டு. சில சமயம் யாரிடமாவது இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு போயிருப்போம்.

இரயிலில் மட்டும் தான் எப்போது ஏறினாலும் நமக்குன்னு ஒரு இடம் இருக்கும் காரணம் நாம் முன்கூட்டியே பயணச் சீட்டைப் பெற்றிருப்போம். பயணச் சீட்டு இல்லை என்றால் இரயிலில் பயணிக்க முடியாது மீறி பயணித்தால் அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்படும். இப்போது நாம் கை காண்பித்தால் நிற்கும் வாகங்களின் லிஸ்டில் ரயிலும் சேர்ந்திருக்கும் போலயே….

அதாங்க நம்ம இப்போ பார்க்க போகும் வீடியோவில் உள்ள ஒரு முதியவர் இரயிலில் ஏறுவதற்காக, இரயிலை நிறுத்த தன்னுடைய கையை சைகையாக காண்பிக்கிறார். அதற்கு அந்த இரயிலும் நின்றுள்ளது. சிறு வினாடிகளே நின்ற அந்த ரயிலில் முதியவர் வேகமாக எறியுள்ளார். உள்ளிருந்த ஒருவர் அவர் ஏறுவதற்கு கை கொடுத்து உதவியும் உள்ளார். பிறகு என்ன முதியவர் அந்த ரயிலில் ஏறி தன்னுடைய பயணத்தை தொடங்கி விட்டார்.

இந்த வீடியோ தற்போது பார்வையாளர்களால் மிகவும் ரசிக்கப்பட்டுள்ளது.