காண்டிராக்டில் கையெழுத்து போட்டு கல்யாணம்.. சொந்தங்கள் முன்பு இந்த மணமக்கள் செய்த கூத்தைப் பாருங்க..!

    சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் இதை, இதை செய்ய வேண்டும் என கறார் கண்டிஷன் போட்டு மணமக்கள் இருவரும் சொந்தங்கள் முன்பு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு, கல்யாணம் செய்த ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

                  திருமண வீடுகளில் முன்பெல்லாம் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் டேன்ஸ் கிளப்பாகவும் மாறிவருகின்றது. இதுவும் அப்படியான ஒரு விசயம் தான்! அட ஆமாங்க. இப்போதெல்லாம் என் திருமணத்தில் நான் எப்படி ஆடியிருக்கேன் பாருங்கள் என மணப்பெண்கள் தாங்களே வீடியோவே போஸ்ட் செய்வதும் பேஷன் ஆகிவிட்டது. 

         திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.  திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என  வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது. 

        இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அதையெல்லாம் அசால்டாக ஓவர்டேக் செய்வதுபோல் இங்கே ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

  இங்கே திருமணம் முடிந்த கையோடு கல்யாண பெண்ணும், மாப்பிள்ளையும் ஒரு பெரிய சைஸ் ஒப்பந்தத்தில் உறவுகள் முன்பு கையெழுத்து போடுகின்றனர். இதில் மாதத்திற்கு ஒரு பீட்ஸா தான் சாப்பிடவேண்டும், வீட்டில் தான் சமைத்து சாப்பிட வேண்டும். தினமும் புடவை அணிய வேண்டும் என 8 கண்டிசன்க:ள் அதில் இருக்கிறது. இதில் மணமக்கள் கையெழுத்துப் போட்டு திருமணம் செய்துள்ளனர். இந்தக் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.