பேரீச்சம்பழம் இப்படித்தான் சாகுபடி செய்வார்களா? எப்படி பேக்கிங் பண்ணுறாங்க பாருங்க…
பேரீட்சம் பழத்தை பிடிகாதவர்களே இருக்க முடியாது. இனிப்பான அதன் சுவைக்கு மயங்கி பலரும் பேரீட்சம் பழம் சாப்பிடுவார்கள். அதிலும் பேரீட்சம் பழம் தொடர்ந்து சாப்பிட்டால் உடம்பில் இரும்புச் சத்து அதிகரிக்கும். இரத்தமும் சுத்தமாகும். ஹீமோகுளோபினும் நம் உடம்பில் கூடும்.
பேரீட்சம் பழத்தைப் பொருத்தவரை நம் நாட்டில் அதிகமாக விளைவது இல்லை. அரபு நாடுகளில் இருந்துதான் அதிகளவு பேரீட்சைப் பழங்கள் இங்கே வருகிறது. அந்தவகையில் பேரீட்சை சாகுபடியின் நுட்பங்களோ, அதை எப்படி அறுவடை செய்து பேக்கிங் செய்வார்கள் என்பதோ நம்மவர்கள் பலருக்குத் தெரியாது. அந்தவகையில் இங்கே பேரீட்சை சாகுபடியின் நுட்பங்கள், அதை எப்படி சாகுபடி செய்வார்கள் என்பது குறித்தெல்லாம் இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.