நிஜ கதாநாயர்களாக அவதாரம் எடுத்த… யதார்த்த மனிதர்கள்.. ப தை ப தை ப்பை ஏற்படுத்தும் காட்சிகள்…!

சாதி, மத, மொழி பேதம் இல்லாத உலகமாக மாறி வருகிறது நிகழ்கால உலகம் என்றால் கற்பனை அல்ல…. யதார்த்தை உணர்த்தும் நிஜ சம்பவம்……. அப்படி ஒரு செயல் தான் இங்கே நடந்தேறியுள்ளது.

பொதுவாக மனிதர்கள் தங்களை மகிழ்ச்சிகரமாகவும், புத்துணர்வோடும் வைத்து கொள்வதற்கு நீண்ட விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வார்கள். அவரவர் விருப்பத்திற்கேற்ற இடத்திற்கு வருகை தருவார்கள். சிறு குழந்தை போன்று தன்னையும் மறந்து அன்று ஒரு நாள் மட்டும் உலகத்தையே மறந்து புத்துணர்வோடு மகிழும் உலகம்……. கேளிக்கை விளையாட்டுகள் நிறைந்த தீம் பார்க். இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாக மெய் மறந்து தங்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளை தேர்ந்தெடுத்து விளையாடுவார்கள். அப்படி விளையாடும் போது மக்கள் சாதி, மத பேதம் இல்லாமல் அனைவரும் ஒவ்வொரு விளையாட்டுகளையும் கூட்டமாகவும் ஒத்துழைப்போடும் விளையாடுவார்கள்.

இங்கே தீம்பார்க்கில் மக்கள் ஸ்பேஸ் ஹன் விளையாட்டை விளையாடி கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அந்த விளையாட்டு சாதனம் வேகமாக சுழலும் போது சாதனத்தில் பழுது ஏற்பட்டு மறு பக்கம் சாய இருந்த நேரத்தில் மக்கள் இதை கவனிக்க …..ஒவ்வொருவரும் வேகமாக சென்று அது விழாமல் இருப்பதற்காக அதன் மேல் ஏறி நின்றனர். மறு நொடியே அனைவரும் அங்கு விளையாடில் பயணித்த மக்களை கடவுள் போல் காப்பாற்றினர் என்று தான் சொல்ல வேண்டும். இங்கு எந்த வித வேறுபாடு காணாமல் ஆபத்தில் மனிதநேயத்துடன் செயல்பட்டதை சமூக வலைதளவாசிகள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

You may have missed