தன் உயிரை பொருட்படுத்தாமல் மயிரிழையில் சுங்க சாவடி ஊழியர்களை காப்பாற்றிய பெண்… வைரலாகும் பெண்ணின் செயல்..!

பெண் ஒருவர் துரிதமாக எந்த பயமும் இன்றி சுங்க சாவடியில் நடைபெற்ற விபத்தில் இருந்து ஊழியர்களை காப்பாற்றிய காட்சிகள் புல்லரிக்க வைக்கிறது.

கனரக வாகனம் ஓன்று வேகமாக திரும்ப முயன்ற போது அருகில் இருந்த சுங்க சாவடியில் மோதியது, அப்பொழுது தைரியமாக செயல்பட்ட பெண் ஒருவர் அங்கு பணியில் இருந்த ஊழியர்களை உடனடியாக மீட்ட காட்சிகள் வலைத்தளத்தில் வைரல் ஆகி உள்ளது. இந்த விடியோவை IAS அவானிஷ் சரண் அவர்கள் டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.

பெண் ஒருவர் விபத்தில் சிக்கிய ஊழியர்களை சற்றும் தாமதிக்காமல் துரிதமாக செயல்பட்டு உடனடியாக ஊழியர்களை பாதுகாப்பாக வெளியேற்றினார் என்று பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்வானது நச்சிவாலா என்ற சுங்க சாவடியில் டோய்வாலா, டேராடூனில் நடைபெற்றுள்ளது.