தந்தையால் கோடிசுவர்களான மகன்களை கண்டிருப்போம்… ஆனால் இங்கு மகனால் கோடிசுவரரான தந்தை… சுவரஸ்யமான சம்பவம்..!


கேரள மாநிலத்தில் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டில் விழுந்த பரிசு தொகையால் ஒருவர் பல கோடிக்கு அதிபதியானார். இவர் தன்னுடைய சிறிய மகன் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தை வைத்து லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். இதில் இவருக்கு 25 கோடி பரிசு தொகை விழுந்துள்ளது.

அனூப் என்பவர் ஆட்டோ ஓட்டுனராக கேரளாவில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடன்களால் தத்தளித்து வந்த நிலையில், குடும்பத்தை காப்பாற்றுவதற்காக மலேசியாவிற்கு சென்று ஹோட்டல்களில் செஃப் வேலையில் சேருவதற்காக தயாராகி கொண்டருந்தார். இதனால் அவர் பேங்கில் 3 லட்சத்திற்கு லோனும் அப்ளை செய்திருந்தார்.அப்போது எதிர்பாராதா விதமாக அவருக்கு 25 கோடிக்கான பரிசு தொகை விழுந்தது.
இந்நிலையில் அவர் செய்தி நிறுவனகளுக்கு அளித்திருந்த தகவலில் தான் 22 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்குவதாகவும் இதில் நூறு முதல் 5000/- ரூபாய் வரை வெற்றிபெற்றிருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது தனது மகன் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த பணத்தில் லாட்டரி டிக்கெட் வாங்கியதாகவும் முதலில் வேறு ஒன்றை தேர்வு செய்து விட்டு பின்னர் இந்த லாட்டரியை கைபற்றியதாகவும், தான் இரண்டாவது தேர்வு செய்த லாட்டரில் பரிசுதொகை விழுந்துள்ளது என்றும் கூறியிருக்கிறார்.

அனூப் முதலில் நம்பிக்கை இல்லாமல் டிவியில் அறிவித்த அறிவிப்பை பார்க்காமல் விட்டு விட்டார், செல் போனில் வந்த தகவலை மனைவியிடம் காண்பித்து பரிசோதித்துள்ளார், மேலும் தான் லாட்டரி வாங்கிய கடையில் உள்ள ஊழியரிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். இந்த அதிஷ்டத்தால் தன்னுடைய கடன்களை எல்லாம் அடைத்து விட்டு, ஒரு வீடு ஒன்றையும், ஹோட்டல் ஒன்றையும் கட்ட தீர்மானித்துள்ளார். சறிய தொகையை சேவை செய்வதற்காகவும் செலவிட போவதாக தெரிவித்திருக்கிறார். கடனாளியாக சொந்த நாட்டை விட்டு பிழைப்பு தேடி வெளிநாட்டுக்கு செல்ல இருந்த நிலையில் தன்னுடைய மகன் மூலம் கோடிசுவரர் ஆனது பேரதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது. “Will build house”: Kerala auto driver wins Onam bumper lottery worth $3.1million (₹25 Cr) – India News (wionews.com)