சேலையை தூக்கி கட்டி மாணவனுடன் ஆட்டம் போட்ட ஆசிரியர்… பலரின் மனதை கொள்ளை கொண்ட காணொளி..!

z- கிட்ஸ் மாணவர்கள் வாழ்க்கையானது 90’ஸ்,2k -கிட்ஸின் பள்ளி நாட்களை விட சுதந்திரமானது. ஆசிரியர்களை கண்டு மரியாதையுடன் அஞ்சி நடுங்கிய ஞாபகங்கள் உண்டு 90-ஸ் மாணவர்களுக்கு. தமக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர்களை தற்போது சந்தித்தாலும் ஒரு வித பயம் கலந்த மரியாதை தான் செலுத்துவார்கள். அதற்கு காரணம் அந்த காலத்து ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொண்டது, மற்றும் ஒவ்வொரு ஆசிரியரும் பாடம் நடத்திய மறு நாள் கேள்வி கேட்பார்கள் அதற்கு மாணவர்கள் சரியான பதில் அளித்தால் கவனிப்பில் இருந்து தப்பிப்பர் இல்லை என்றால் பிராம்பால் சிறப்பான கவனிப்பு இருக்கும். படிக்காத மாணவர்களை குனிந்து நிற்க சொல்லுதல், முட்டி போட வைப்பது, பிரம்பால் அடிப்பது என மாணவர்களை வெளுத்து வாங்குவார்கள்.

இப்பொழுது எல்லாம் தலைக்கீழாக நடக்கிறது. மாணவர்களும் ஆசிரியர்களும் நண்பர்கள் போல் பழகி வருகின்றனர். இத்தகைய ஆசிரியர்களை பிரிய மனம் இல்லாமல் கண்ணீர் சிந்தும் மாணவர்களை நாம் சமூக வலைத்தளங்கள் மூலமாக காணலாம். தற்போதுள்ள சமுதாயம் ஆசிரியர்கள் மற்றும் மாணர்வர்களின் உறவில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கு காணொலியில் ஆசிரியர் மாணவருடன் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

You may have missed