சின்ன, சின்ன ஸ்டெப்ஸ் தான்..ஆனாலும் என்ன க்யூட்டா ஆடுறாங்க பாருங்க… இந்த பொண்ணுங்க ஆடும் ஸ்டைலே தனிதான்..!

            பொதுவாகவே நடனத்தைப் பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். நடனம் ஆடுவதே ஒரு கலை. முன்பெல்லாம் முறையாக நடனம் கற்றவர்கள் மட்டும் தான் ஆடிக்கொண்டு இருந்தனர். ஆனால் இன்று டிவி பெட்டிகளின் பெருக்கத்தால் அதைப் பார்த்துக் கற்றுக்கொண்டே அனைவரும் நன்றாக ஆடுகிறார்கள். அதிலும், இப்போதெல்லாம் கல்யாண வீடுகளில் மணப்பெண்களே நடனம் ஆடுவதும் பேசனும் ஆகிவிட்டது.

ஜிமிக்கி கம்மல் என்னும் பாடலுக்கு கேரளத்தைச் சேர்ந்த ஷெரில் என்பவர் ஆடிய நடனம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதன் பின்னரே பல பெண்களும் தயக்கமின்றி பொதுவெளியில் ஆடத் தொடங்கினர்.  அதேபோல் சினிமாவில் ஏதாவது பாடல் மெகா ஹிட் அடித்தால் அந்தப் பாடலுக்கு ஆடி மகிழ்வதும் இப்போதெல்லாம் ட்ரெண்டாகி விட்டது. 

  இங்கே சில ரீமிக்ஸ் பாடல்களுக்கு வெறுமனே சின்ன, சின்ன ஸ்டெப்ஸ் மட்டுமே போட்டு அழகிய இளம்பெண்கள் சிலர் செம க்யூட்டாக ஆடுகின்றனர். அது பார்ப்பதற்கு பழங்குடி சமூகத்தின் நடனம் போலும் இருக்கிறது. இதோ நீங்களே இந்த ஆட்டத்தைப் பாருங்களேன். இதுவரை 19 லட்சம் பேர் பார்த்து வியந்த வீடியோ இது…

https://youtube.com/watch?v=PCZdvdT7b_o