வெறும் தரையில் அமர்ந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? இதுமட்டும் தெரிஞ்சா இனி தரையில் தான் சாப்பிடுவீங்க…

  முன்பெல்லாம் நம் முன்னோர்கள் தரையில் தான் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆனால் இன்று நாகரீகம் என்னும் பெயரில் நாம் டேபிள், டைனிங் டேபிள் என சாப்பாட்டின் வடிவத்தை மாற்றிக்கொண்டோம். ஆனாலும் தரையில் அமர்ந்து சாப்பிடுவது என்பது நம் உடலுக்கே பல நன்மைகளை வாரிக் கொடுக்கக் கூடியது.

   ஆம். இன்னும் சொல்லப் போனால் உணவு உங்களுக்கு எப்படி ஆரோக்கியத்தைக் கொடுக்குமோ, அதேபோல் தரையில் அமர்ந்து சாப்பிடுவது உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும். எப்படி எனக் கேட்கிறீர்களா? நாம் இருகால்களையும் மடக்கிக்கொண்டு தரையில் அமர்ந்து சாப்பிடுவது சுகாசனம் என்னும் யோகா பயிற்சி. இது செரிமானத்தை எளிதாக்கும். வேகமாக்கும். அதேபோல் சாப்பிட தரையில் அமர்ந்திருக்கும் போது இயல்பாகவே நாம் முன்னாள் போய் உணவு எடுத்துவிட்டு பின்னால்வருவோம் அல்லவா? இது வயிற்று தசைகளுக்கும் நல்ல பயிற்சி ஆகும். செரிமானத்தையும் இதுவும் எளிதாக்கும். 

 இதேபோல் நாம் தரையில் அமர்ந்து உண்ணும் போது வேகஸ் என்னும் நரம்பு சுறுசுறுப்பாக இயங்கும். அதேபோல் தரையில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, யாரது உதவியும் இல்லாமல் எழுந்திருப்பது நம் உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கும். இது மூட்டு, இடுப்பு எலும்பையும் பலப்படுத்தும். 

  வெறும் தரையில் காலை மடக்கி அமர்ந்து சாப்பிடுவது பத்மாசனத்திற்கும் வழிவகுக்கும். ஒருவகையில் இது நினைவாற்றலையும் அதிகரிக்கும். இப்போது சொல்லுங்கள் இனி நீங்களும் தரையில் அமர்ந்து சாப்பிடுவீர்கள் தானே? 

You may have missed