பெண்களின் குழாய் அடி சண்டையே தோத்துரும் போல.. மனிதர்களைப் போலவே மண் அள்ளிப்போட்டு சாபமிட்ட மீன்கள்..!

fish_cute_fight

பலிசொல்லி கோபத்தில் மனிதர்கள் சாபமிடுவதைப் பார்த்திருப்போம். தீராத ஆத்திரத்தில் நீ நன்றாக இருக்க மாட்டாய் என மண்ணை அள்ளிப்போட்டு சாபம் இடுவதையும் பார்த்திருப்போம். ஆனால் இங்கே இரு மீன்கள் சாபமிட்டுக் கொள்வது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு அக்வேரியம் கடையில் பெரிய தண்ணீர் தொட்டியில் மீன்கள் இருந்தன. அந்த மீன்களுக்குள் எல்லைப் பிரச்னையா? அல்லது வேறு ஏதும் பிரச்னையா எனத் தெரியவில்லை. இரு மீன்கள் தங்களுக்குள் செமையாக சண்டை போட்டுக்கொண்டன. சண்டை என்றால் நேருக்கு, நேர் மோதிக்கொள்ளும் சண்டை அல்ல. இரண்டு மீன்களும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டனர். அந்த தொட்டிக்குள் இருந்த கடற்கரை மண்ணை வாயில் நிறைத்துவந்து ஒரு மீன், மற்றொரு மீனின் மீது துப்ப, பதிலுக்கு இன்னொரு மீனும், அதேபோல் வாயில் மண்ணைப் போட்டு துப்பியது.

இணையத்தில் இந்த வீடியோ வைரலாகும் நிலையில் மனிதர்களைப் போலவே மீன்களும் ஒருவர் மீது ஒருவர் மண்ணை அள்ளிப்போட்டு சாபமிடுவதாக இணையவாசிகள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

You may have missed