புதுமையான முறையில் நடந்த திருமண நிச்சயம்… அட மாப்பிள்ளை எங்க நிக்குறாரு பாருங்க..


திருமணம் செய்வதற்கு முன்னர் மணமக்கள் இரு வீட்டாரின் ஒப்புதல் பெற்ற பிறகே நிச்சயம் நடைப்பெறும். இன்றைய காலத்தில் அனைத்தும் நிகழ்வுகளும் பிரமாண்ட முறையில் நடத்துகின்றனர், மணமக்கள். முற்காலத்தில் என்ன உடை தேர்ந்தெடுக்க வேண்டும், என்ன சாப்பாடு விருந்தினருக்கு வழங்க வேண்டும், எவ்வளவு திருமண அழைப்பிதழ் அச்சு அடிக்க வேண்டும் என்பதை மணமக்களின் பெற்றோர்களும் உறவினர்களும் கலந்து ஆலோசித்து முடிவு எடுத்தனர். 2-கே காலத்தில் சின்ன விஷயங்களுக்கும் மணமக்கள் இருவரின் அபிப்ராயத்தை தெரிந்து கொண்டு அல்லது ஒப்புதல் பெற்று அனைத்து விஷயங்களையும் செய்கின்றனர்.

நிச்சயம் செய்யும் போது பெற்றோர்கள், உடன் பிறப்புகள், உற்றார் , உறவினர் மட்டுமே கலந்து கொள்வர். தற்போது திருவிழா போன்று நண்பர்கள், ஊரார், தெரிந்தவர்கள் என்று அனைவரையும் அழைத்து பெரிய விழா போன்று கொண்டாடுகின்றனர். உறவினர்கள் வெளியூரில் அல்லது வெளிநாட்டில் இருந்தால் அவர்களுக்கு நிச்சயத்தில் எடுத்த புகைப்படத்தினை காட்டுவது வழக்கமான ஓன்று 90-ஸ் காலத்தில் ….தற்போது உறவினர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் கவலை இல்லை…..வீடியோ கால் செய்து நேரலையில் உடன் இருந்து வாழ்த்துவது போல் அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் பெருகி விட்டன.

இங்கும் ஓரு உறவினர் வெளியூரில் இருக்க அவரால் நிச்சயதார்த்தத்திற்கு வர முடியவில்லை, ஆனாலும் உறவினர்கள் அவரால் கலந்து கொள்ள முடியாத சூழலிலும் இணையத்தின் மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நேரில் வந்து வாழ்த்து தெரிவித்ததை போன்று இருந்ததை உறவினர்கள் அனைவர்க்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது…..அந்த காணொலியை இங்கே காணலாம்….