இயற்கையின் அரிய நிகழ்வு… தாகத்தால் மேகம் கடல் நீரை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிய அதிசய காட்சி..!

cloud_water_drink

இயற்கை நாம் அதிசயக்கிறோம், ரசிக்கிறோம் மேலும் ஆராய்கிறோம். இயற்கையை நம்மால் பார்த்து ரசிக்க முடியுமே தவிர அவற்றை தீவிர ஆராய்ச்சிக்கு பிறகே தெரிந்து கொள்ள முடியும்.

கருத்த மேகம் தாக்கத்தால் கடல்நீரை ஸ்ட்ரா போன்று உறிஞ்சிய சம்பவம் வியக்க வைத்துள்ளது. இது ஆங்கிலத்தில் வாட்டர்ஸ்பௌட் என்றழைக்கப்படுகிறது.இது சுழலும் மேகம் நிறைந்த காற்றின் நெடுவரிசை. இது சூறாவளியை போன்று இருக்கும் ஆனால் தீவிர தன்மை குறைந்து காணப்படும். ஒரு சிறிய விட்டம் கொண்ட வேகமாக சுழலும் காற்று நீரின் மேற்பரப்பிலுள்ளது. நீர் மட்டம் வேகமாக வளரும் குமுலஸ் மேகத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது. இது பல வடிவங்களை எடுத்து கொள்ளும். இது ஒரு வட்டர்ஸபௌட் குடும்பம் என அறியப்படுகிறது. மேல்நோக்கி நகரும் கற்று மின்னோட்டத்தால் ஏற்படுகிறது. சூறாவளி சூழல் காற்றுகள், புயல் போன்றவை வளிமண்டல நிகழ்வுகளுடன் தொடர்புடையவை.

புனல் போன்ற அமைப்பை பெற்றுள்ள மேகங்கள் நன்னீரால் உருவாக்கப்பட்ட தாய் மேகத்தின் அடி பகுதியில் கீழ் நோக்கி வளர்ந்து நீரின் மேற்பரப்பில் சூழலின் மையத்தில் இருண்ட இடத்தை சுற்றி கொள்கிறது. இந்த சூழல் பதினைந்து முதல் 85 வினாடி வரை காற்று வீசுவதை குறிக்கிறது. இந்த சூறாவளி அமைப்பு 5 முதல் பத்து நிமிடங்கள் நீடிக்கும் சில நேரங்களில் ஒரு மணி நேரம் வரை நீடிப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கும்.

இந்த வட்டர்ஸபௌட் நீரில் இருந்து நிலத்திற்கு செல்லாது. மேலும் இவை குளிர்ந்த காற்று பெரிய நீரின் மேற்பரப்பில் வெப்ப காற்றுடன் கலப்பதால் காலநிலையில் மாறுபாடு ஏற்படுவதால் நிகழ்கிறது என்றும் அறியப்படுகிறது. இந்த நிகழ்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் பருத்தி துறை கடற்கரையில் மேகமானது கடல் நீரை உறிஞ்சும் அதிசய நிகழ்வு ஏற்பட்டதை இந்த காணொலியில் காணலாம் ……..

You may have missed