ஆண்கள் மேளம் அடிக்க… பெண்கள் ஆட்டம் ஆட… என்னா ஒரு ஆட்டம்? நாள் முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம்….!

cute_dance_vid_mzz

கிராமிய கலைகளில் மிகவும் புகழ்பெற்றது தப்பாட்டம், சிலம்பாட்டம், கும்பாட்டம், வில்லுப்பாட்டு,நையாண்டி மேளம் மற்றும் கேரள கதகளி, செண்டை மேளம். தொன்று தொற்று வரும் பராம்பரிய கலைகளில் ஒரு சில கலைகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. சமீப காலங்களாக தப்பாட்டமும், கேரள செண்டை மேளமும் ட்ரெண்டிங்கில் உள்ளன.

என்ன தான் நாம் சினிமாவில் மெல்லிசை, குத்து பாட்டு, சோகம் பாடல்கள் என நாம் ரசித்தாலும், அவரவரின் மனநிலைக்கேற்ப அந்த பாடல்களை கேட்டு ரசிப்போம். ஒருவருக்கு மென்மையான இசை கேட்பதற்கு பிடிக்கும், இன்னொருவருக்கு சோக பாடல்கள் கேட்பதற்க்கு பிடிக்கும், இளைஞர்களுக்கு குத்து பாடல்கள் என்றால் சொல்லவா வேண்டும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். இதெல்லாம் ஒரு சேர அனைவரையும் ரசிக்கும் தன்மைக்கு கொண்டுவராது. அதனால் தான் என்னவோ அனைவரையும் கவர்ந்திழுக்கும் இசையாக நாட்டுப்புற இசைகள் இருக்கின்றன.

கோவில் விழாக்கள், பண்டிகைகள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் எப்போதும் மேலோங்கி நிற்பது நாட்டுப்புற கலைகளே.

ட்ரெண்டிங்கில் இருக்கும் பறையும், செண்டைமேளமும் ஒரு சேர இசைக்கும் போது மெய் சிலிர்க்க வைக்கும். இந்த வீடியோவில் நாம் காண இருப்பது ஆண்களும், பெண்களும் இசை அமைத்து நடனம் ஆடிய செண்டை மேளம். ஆண்களும்,பெண்களும் இந்த குழுவில் அனைவரும் ஓன்று சேர்ந்து உற்சாகமாக நடனம் ஆடி சுற்றி இருப்பவர்களை கண் இமைக்காமல் ரசிக்க வைத்தனர். என்னா அடி….. இப்படி ஒரு ஆட்டத்தை கண்டதில்லை என சமூக வலைதளவாசிகள் கம்மெண்ட் செய்து வருகின்றனர். உங்களுக்காக அந்த காணொலி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

You may have missed