ஆசையாக வளர்த்த மரத்தின் மேல் சிறுவனுக்கு இருக்கும் பாசத்தைப் பாருங்க… தன் செயலால் ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்கவைத்த சிறுவன்..!

     மரங்களைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். மரங்கள் நமக்கு எண்ணற்ற பயனை வாரி வழங்குகிறது. மரங்கள் அதனால் தான் அனைவராலும் விரும்பப்படுகிறது.

  வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என அரசும் தன் பங்கிற்கு அடிக்கடி கூறி வருகிறது. தாறுமாறான பருவ நிலை மாற்றத்திற்கும், மழைகள் குறைந்ததற்கும்கூட மரங்கள் இன்று குறைந்துபோனதுதான் காரணம். இப்படியான சூழலில் ஒரு சிறுவனுக்கு மரத்தின் மேல் இருக்கும் பாசம் நெகிழ வைத்துள்ளது. அப்படி என்னதான் அந்தச் சிறுவன் செய்தான் எனக் கேட்கிறீர்களா?

    பொதுவாக இன்று விவசாய நிலங்களும், தோட்டங்களும்கூட வருமானம் கிடைக்கிறது என்னும் பெயரில் அடிக்கடி வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகிறது. ஆனால் இங்கே ஒரு சிறுவன் தன் தோட்டத்தில் வாழை மரம் ஒன்று நட்டிருந்தான். ஆனால் அங்கே கடுமையான சூறாவளிக் காற்று வீசியது. தான் ஆசையாக வளர்த்த வாழை மரம், எங்கே சூறாவளிக் காற்றில் விழுந்து விடுமோ என பாசத்தின் உச்சத்திற்கேப் போன அந்தச் சிறுவன் வாழைமரத்தை அப்படியே தாங்கிப் பிடித்துக்கொண்டே நிற்கிறார். மொத்த சூறாவளியும் ஓய்வதுவரை அந்தச் சிறுவன் அப்படியே தான் பிடித்துக் கொண்டு இருந்தான்.

  தான் ஆசையாக வளர்த்த வாழை மரத்தின் மீது இந்த சிறுவனுக்கு இருக்கும் பாசம் நெகிழவைத்துள்ளது. இதோ நீங்களே பாருங்களேன். 

You may have missed