யாரு இடத்துல வந்து யார் சீன போடுறது… ரோட்டில் ஹாயாக ரீல்ஸ் செய்த பெண்ணுக்கு குரங்கு செஞ்ச தரமான சம்பவம்..!

road_viral_tik_tok

சமூக வலைதளவாசிகள் பலருக்கும் பாடமாக இருக்கும் இந்த குரங்கு செய்த செயல். இன்று உலக நடப்பில் அக்கம் பக்கம் என்ன நடக்கிறது என்று சமூக வலைத்தளத்தினருக்கு கவலை இல்லை. அவர்களின் ஒரே கவலை வலைத்தள பக்கங்களில் என்ன புதிதாக செய்திகள் வந்துள்ளது, இன்றைய வைரல் காட்சிகள் என்ன, செய்திகள் என்ன என்பதை கண்ணோட்டம் செய்வது தான் வாடிக்கையாகி போனது.

ஒரு சிலர் செல்பி மோகத்தாலும், ஒரு சிலர் இன்ஸ்டாகிராம்,டிக்-டாக் போன்ற சமூக வலைத்தளத்தில் அவர்களின் சாதனையை பதிவிடுவதும், பதிவிடுவதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டமும் என இணைய வசதிகள் பெருகிய பிறகு தனி மனித விருப்பங்கள் பெரிதும் மாற்றம் அடைந்துள்ளது. 2k-காலத்தால் தலைக்கீழ் மாற்றங்களால் தற்கால தலைமுறை தவறு என்று அறியாது மாய வலையில் சிக்குவது பெரும் சவாலாக இருக்கிறது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்.

அக்கம் பக்கம் பார்த்து பழகு….என்பது ஆன்றோர் வாக்கு. நாம் சகஜமாக அனைவரிடமும் பழகினாலும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நம்மை நம் பல தீங்கு விளைவிக்கும் மனிதர்களிடம் இருந்தும், சூழல்களிடம் இருந்தும் தற்காத்து கொள்ள முடியும்.

இங்கே இளம் பெண் ஒருவர் ஒய்யாரமாக தன்னை மறந்து டிக் -டாக் செய்து கொண்டிருந்தவருக்கு குரங்கு ஓன்று இது எங்க ஏரியா….கொஞ்சம் பார்த்து போ…..என்று சமிக்ஞயை செய்துள்ளது. அதை கண்டு பயத்தில் அரண்ட பெண் போதும் டா சாமி என்று ஓட்டம் எடுக்கிறார். நகைசுவைக்கு பஞ்சம் இல்லாத இக்காணொலியை இங்கே காணலாம்…

You may have missed