மனிதர்களைப் போலவே ஒன்றாக சேர்ந்து தன் குடும்பத்துடன் பேசி அரட்டை அடிக்கும் கிளிகள்… என்ன ஒரு அழகான காட்சி பாருங்க..!
வீட்டில் செல்லப்பிராணியாக விலங்குகள் என்றால் பூனை, நாய்களை வளர்ப்பார்கள். ஆனால் பறவைகள் என்றால் அதில் கிளி, லவ் birds, புறா, கோழிகளை வளர்ப்பார்கள். அதிலும் கிளிகள் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதனுடன் பேசுவது என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. வீட்டில் வளர்க்கப்படும் கிளிகள் பொதுவாகவே மனிதர்கள் பேசுவதை போன்றே பேசும். நாம் என்ன பேசுகிறோமோ அதனை அப்படியே மற்றவர்களிடமும் பேசும்.
வீட்டுக்கு புதிதாக வருபவர்கள் என்றாலும் அவர்களிடமும் நாம் சொல்லும் வார்த்தைகளில் பேசி அவர்களை வியப்படைய வைக்கும். தற்போது இணையத்தில் மிகவும் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவில் கிளிகள் மனிதர்களைப் போன்று அதுங்களுக்குள்ளாகவே பேசிக் கொள்கின்றன.
இந்த வீடியோவில் கிளிகள் பேசும் பாஷையானது கேட்பதற்கே இன்னிசையை கேட்பது போலிருக்கிறது. இதை வைத்தே ஒரு பாட்டுக்கு மியூசிக் போட்டு விடலாம்… கிளிகளின் பாட்டு யாருக்கும் பிடிக்காமல் போவதில்லை….