பிரபல மலையாள நடிகர் கர்ணன் புகழ் லாலின் மகளா இது..?
இவளோ நாள் தெரியாம போச்சே.. எப்படி இருக்காங்க பாருங்க…!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி வெற்றிபெற்ற படம் தான் ‘கர்ணன்’ விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் இந்தப்படம் பெரும் வெற்றி பெற்றது.
பரியேறும்பெருமாள் வெற்றிக்குப் பின்பு, மாரி செல்வராஜ் இயக்கிய படம் என்பதாலும், தனுஷ் படம் என்பதாலும் இயல்பாகவே ‘கர்ணன்’ படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதை கனக்கச்சிதமாக கர்ணன் பூர்த்தி செய்தது.

கர்ணன் படத்தில் தனுஷ், யோகிபாபு, வக்கீல் வள்ளிநாயகம், மலையாள நடிகர் லால் என அனைவரது நடிப்புமே வெகுவாக பேசப்பட்டது. மஞ்சனத்தி புருசனுக்கு பத்து ரூபாய் போதுமா? என லால் வரும் காட்சியில் வசனத்தில் இடம்பெறும் பாட்டியின் நடிப்பும் வெகுவாகப் பேசப்பட்டது. லால் தமிழில் வெகுசில படங்களில் மட்டுமே வந்தாலும் கர்ணன் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

இவர் தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படத்தில் கேப்டனுக்கு அண்ணணாக நடித்தார். தொடர்ந்து விஷாலுக்கு வில்லனாக சண்டக்கோழியிலும் மிரட்டினார். அண்மையில் பருத்திவீரன் கார்த்தி நடித்த சுல்தான் படத்தில் அவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. நடிகர் லாலில் மனைவி பெயர் நான்சி. இந்த தம்பதிக்கு ஜீன்பால் லால் என்னும் மகனும், மோனிகா என்ற மகளும் உள்ளனர். நடிகர் லால் தன் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
pic 1

pic 2
