பின்நோக்கி சென்ற ரயில் வண்டி…. இப்படி ஒரு அதிசய கட்சியை யாரும் பாத்திருக்கமாட்டீர்கள்..!

train_backword_nz_trends

போக்குவரத்திற்கு துறை வளர்ச்சியடைந்த காலத்தில் இருந்து தான் நாகரிகம் வளர்ந்தது. நாகரிகம் வளர வளர சைக்கிள் முதல் பிளைட்டுகள் வரை மனிதர்கள் பிரயாணம் மேற்கொள்கின்றனர். மனிதர்களின் வசதிக்கேற்ப பஸ், ஆட்டோ, கார், ரெயில், கப்பல் வானூர்தி, பிளைட் போன்ற வாகனங்கள் மூலம் வெளிஊர்களுக்கும், வெளி நாடுகளுக்கும் பிரயாணம் மேற்கொள்கிறோம்.

போக்குவரத்துக்கு பல வாகனங்கள் இருந்தாலும் அனைத்து தர மக்களும் பிரயாணம் மேற்கோவது ரெயில் வண்டியில் தான். உலகில் அதிகமாக மக்கள் ரெயில் பயணங்களையே விரும்புகின்றனர். அவற்றில் சீனா, முதலிடம் வகிக்கிறது, இரண்டாம் இடத்தில் நம் இந்திய திருநாடும், மூன்றாம் இடத்தில் ஜப்பானும் வகிக்கிறது.

உலகின் அதி நவீன மற்றும் சுற்றுலா செல்ல மிக சிறந்த ரெயில் பயணங்களாக முதல் 20-பது இடங்களில் இந்தியாவின் அதி நவீன மற்றும் சொகுசு தொடர்வண்டிகள் இடம்பெற்றுள்ளன. அவை பேலஸ் ஆன் வீல்ஸ் இது இந்தியாவின் யூனஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கபட்ட இந்தியாவின் பழமை வாய்ந்த மற்றும் புகழ் பெற்ற அரண்மனைகள், சுற்றுலாதளங்களை பார்வையிட அழைத்துச்செல்கிறது. மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ் இதுவும் பழமைவாய்ந்த பகுதிகளையும், தாஜ்மஹால் மற்றும் அதனை சுற்றியுள்ள தனியார் பகுதிகளை பார்வையிட முடியும்.கோல்டன் தேர் ரெயில் பயணம் தென்னிந்தியாவின் மாநிலங்களான கர்நாடகா,கோவா , தமிழ் நாடு, பாண்டிசேரி போன்ற மாநிலங்களில் புகழ் பெற்ற இடங்களான பெங்களூர், மைசூர், ஹம்பி, மகாபலிபுரம், தஞ்சாவூர் ,செட்டிநாடு, கொச்சி போன்ற முக்கிய சுற்றுலாத்தளங்களை பார்வையிட வழி வகுக்கிறது.

சரி நாம் ரெயில் முன்னால் சென்று தான் பார்த்திருப்போம், ஆனால் இங்கே ஒரு ரெயில் முன்னாலும் செல்கிறது அதே போன்று பின்னாலும் செல்கிறது. இந்த ரெயில்கள் மாடர்ன் டீசல் எலக்ட்ரிக் ட்ரைன்களாக கருதப்படுகிறது, இது முன்னோக்கியும், பின்னோக்கியும் நகரும். இங்கே காணொலியில் ரெயில் பின்னால் செல்வதை ஒருவர் அதை விவரிக்கிறார். அந்த காணொலி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது…

You may have missed