நம்மை பள்ளி பருவத்திற்கு கூட்டி செல்லும் இளஞ்சிட்டுகளின் நடனத் திருவிழா… ஒன்ஸ் மோர் கேட்டு அரங்கம் அதிரவைத்த மாணவிகள்..!

school_girls_dance_nzzz

பள்ளிக்கு சென்ற அனைவருக்கும் பள்ளி நாட்கள் மறக்க முடியாத நினைவலைகள் ஏற்படுத்தும். ஒரு ஒருவருக்கும் ஒரு விதமான திறமையானது இருக்கும். சில குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அவர்கள் அவ்வாறு சிறந்து விளங்குவதற்கு அவர்களின் கடின உழைப்பு காரணமாகும். ஒரு சில குழந்தைகள் ஓவியம் வரைதல், தற்போது உள்ள 3-டி பெய்ண்டிங் ஓவியம் வரைவது வரை குழந்தைகள் அசாத்திய திறமைகளோடு இருக்கிறர்கள். ஒரு சில குழந்தைகள் விளையாட்டுகளில் கவனம் செலுத்தி தங்களை தயார்படுத்தி வருகின்றனர். ஒரு சில குழந்தைகள் பேச்சு போட்டி ,கவிதை போட்டி, கட்டுரைப்போட்டி , கதை எழுதுதல், சமையற் கலையிலும் சிறந்து விளங்குகிறர்கள். என்ன தான் பல திறமைகள் பொதிந்திருந்தாலும் அனைவருக்கும் நடனத்தில் ஈர்ப்பு இருக்கும்.

பற் பல திறமைகள் கொண்டு தங்கள் பெற்றோர் மட்டும் இன்றி பள்ளிகளுக்கும் பெயர் வாங்கி தரும் குழந்தைகள் ஆர்வமுடன் ஆண்டின் இறுதியில் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் விழா தான் பள்ளி நாள் விழா. இந்த விழாவில் குழந்தைகள் பாரபட்சமின்றி அனைவரும் ஏதாவது ஒரு போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். வகுப்பில் உள்ள அனைவரும் தவறாது பங்கேற்பது நடனத்தில் தான். 90-ஸ் கால கட்டங்களில் பொதுவாக அனைத்து பள்ளிகளில் ராதை மனதில்…. ராதை மனதில்….. என்ற பாடலுக்கு நடனம் ஆடாத மாணவர்களும் பள்ளிகளும் இல்லை என்றே கூறிவிடலாம்.

அது போல் இங்கே ஒரு பள்ளியில் மாணவிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டு நடனம் ஆடிய காணொலிகள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. உங்களுக்காக காணொலி பதிவிடப்பட்டுள்ளதை பார்த்து மகிழலாம்.

You may have missed