தினம் இரவு 6 பாதாமை நீரில் ஊறவைத்து, காலையில் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அற்புதங்கள்..!

bhadham_health_tips

பாதாம் பருப்பில் உடலுக்கு நலன் சேர்க்கும் விட்டமின்கள் ஏராளம் உள்ளது. வைட்டமின் இ, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்சீனியம், துத்தநாகம், செம்பு, சிலினியம் போன்ற ஏராளமான சத்துகள் இருக்கிறது.

பொதுவாகவே பாதாம் பருப்பில் கலோரிகளும், கொழுப்புகளும் அதிகம் இருப்பதனால் உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் இதை அதிகமாக சாப்பிட்டுவிடக் கூடாது. காரணம் இது பலவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்.

நாள் ஒன்றுக்கு நம் உடம்புக்கு 15 மில்லி கிராம் வைட்டமின் இ சத்து தேவைப்படுகிறது. ஒரு கப் பாதாமில் 25 மில்லிகிராம் வைட்டமின் இ நிறைந்துள்ளது. அதனால் பாதாம் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு ஆகியவை நீங்கும். அதே போல் தினசரி 10 மில்லி கிராம் மெக்னீசியம் நம் உடலுக்குத் தேவை. ஆனால் பாதாமில் அதை விட கூடுதலான மெக்னீசியம் உள்ளது. இதனால் அளவுக்கு மீறி சாப்பிட்டால் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

அதிக பாதாம் சாப்பிட்டால் ஒவ்வாமை பிரச்னையும் ஏற்படும். பாதாமுடன் கார உணவுகளை சேர்த்து சாப்பிடவும் கூடாது. அப்படி சாப்பிட்டால் உடலில் நச்சுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. இதேபோல் இரவு முழுவதும் ஆறு பாதாம்களை தண்ணீரில் ஊறவைத்து விட்டு காலையில் சாப்பிடுவதால் நம் உடலில் பல மாற்றங்களையும் காண முடியும்.

நீரில் ஊறவைத்த பாதாமில் இருந்து லிப்பெஸ் என்னும் ஒரு நொதி வெளியிடப்படுகிறது. இதை சாப்பிடும் போது நாம் உண்ட மற்ற உணவுகள் எளிதில் செரிக்கின்றன. உடம்பில் கெட்ட கொலஸ்டிரால் அதிகம் இருந்தால் இது அருமருந்து. ஊறவைத்த பாதாம் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து, நல்ல கொலஸ்டிராலை கூட்டுகிறது. ஊறவைத்த பாதாம் இதயநோய்க்கும் அருமருந்து.

இதேபோல் ஊறவைத்த பாதாமில் ஆல்பா, டெக்கோபிரால் போன்ற பொருள்கள் அதிகரிக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதேபோல் இரத்த சர்க்கரையின் அளவையும் இது கட்டுப்படுத்தும். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த ஊறவைத்த பாதாம் போலிக் அமிலத்துக்காக சாப்பிடலாம். இதனால் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும். நம்மை இளமையோடு வைக்க பாதாமில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்களும் பணி செய்யும். புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும் ஊறவைத்த பாதாமுக்கு உண்டு.

அப்புறம் என்ன? இனி உங்க வீட்லயும் தினமும் ஆறு பாதாமை ஊற போடுங்க…

You may have missed