என்னடா இது பென்ஸ் காருக்கு வந்த சோதனை.. ரேஷன் கடைக்கு போனது ஒரு குத்தமா… வச்சி கலாய்க்கும் இணையவாசிகள்..!
நாம் வெளியில் செல்வதற்கு இரு சக்கர வாகனத்தை உபயோகிப்போம். தூர பயணத்திற்கு நான்கு சக்கர வாகனம் உள்ளவர்கள் கார் போன்ற வாகனங்களை உபயோகிப்பார்கள். இல்லாதவர்கள் அரசு பேருந்துகளிலோ, ரெயில் பயணங்களையோ அவரவர் விருப்பப்படி, வசதிக்கு தக்கபடி பிரயாணம் மேற்கொள்வோம். அருகில் செல்ல வேண்டுமானால் நடந்தே சென்று விடுவோம்.
இங்கு ஒருவர் ரேசன் பொருட்கள் வாங்குவதற்கு விலை அதிகம் கொண்ட பென்ஸ் காரில் வந்து மக்களை திணறடித்துள்ளார்.இவர் ரேசன் பொருட்களை வாங்கி விட்டு அதனை காரில் ஏற்றி செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஒரே நாளில் ஒபாமா ரேஞ்சில் பிரபலம் அடைந்த இவர், இது தன்னுடைய உறவினர் ஒருவரின் கார் என்றும் அவர் வெளி நாட்டில் இருப்பதால் காரினை தன்னுடைய வீட்டில் நிறுத்தி வைத்திருப்பதாகவும், காரில் ஸ்டாடிங்க் ட்ரபிள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டி அந்த காரினை அவ்வப்போது இயக்கி வருவதாகவும், அப்படி வரும் போது தான் ரேசன் பொருட்களை ஏற்றி சென்றதாகவும், தன்னுடைய குழந்தைகள் அரசு பள்ளயில் படிக்கின்றனர் என்றும் பென்ஸ் காரினால் சர்சைக்குள்ளான சாதாரண புகை பட கலைஞர் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் வைரல் ஆன இவரின் காணொலி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.