ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குட்டியானை.. காப்பாற்றிக் கரைசேர்த்த தாய் யானை…!

      பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் யானை, நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும்.

   ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். அதிலும் மதம் பிடித்துவிட்டால் கோபம் கொக்கரிக்கும் யானைகள் நிஜத்தில் அவ்வளவு சாந்த சொரூபமானவை. அதிலும் தன் பாகன்களிடம் மிகவும் நெருங்கிய உறவில் இருக்கும். அதிலும்தாய்ப் பாசத்தில் மனிதர்களுக்கு சற்றும் குறைவில்லாதது தான் யானைகள் அதை அப்படியே மெய்ப்பிக்கும்வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

   யானைக் கூட்டம் ஒன்று நடந்துவந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு குட்டி யானை, தன் தாயோடு வந்தது. காட்டுப் பாதையில் யானைகள் நடந்து சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒரு காட்டாறு வந்தது. அந்தக் காட்டாற்றில் குட்டி யானை அடித்துச் செல்லப்பட்டது. இதைக் கவனித்த தாய் யானை அந்தக் குட்டியானையை மிக அழகாக மீட்டுக் கொண்டுவந்து, கரை சேர்த்தது. இந்தக் காட்சியை வனத்துறை அதிகாரி ஒருவர் தன் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட அது இப்போது வைரல் ஆகிவருகிறது. 

You may have missed