அடேங்கப்பா ராணுவ பயிற்சி வகுப்புகள் இவ்வளவு கடினமாக இருக்குமா..? எவ்வளவு கடினமாக பயிற்சி பண்ணுறாங்க பாருங்க..!
தன்னைப் பற்றியே யோசிக்காமல் நாட்டைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் யோசிப்பவர்கள் தான் ராணுவ வீரர்கள். அவர்களின் தியாகத்திற்கு ஈடு இணையே இல்லை என சொல்லிவிடலாம். ராணுவ வீரர்கள் மட்டும் எல்லையில் தங்கள் உயிரையே துச்சமாக நினைத்து பணி செய்யாவிட்டால் நாமெல்லாம் நிம்மதியாக கண் தூங்க முடிகிறது.
எல்லையில் தன் உயிரைக் கூடப் பொருட்படுத்தாமல் களமாடும் ராணுவ வீரர்கள் போர் வரும்போதுதான் சண்டை செய்வார்கள் என்றும், மற்ற நேரங்களில் ரிலாக்ஸ்டாக இருப்பார்கள் என்றும் நாம் கற்பனை செய்து கொள்கிறோம். அவர்களின் பயிற்சிகள் மிகக் கடினமானது. சதா சர்வகாலமும் அவர்கள் அதற்கென மெனக்கெட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
போர் நடக்கிறதோ இல்லையோ, தினம், தினம் அவர்கள் கடுமையான பயிற்சிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதோ அந்தவகையில் இங்கேயும் ராணுவ வீரர்கள் மேற்கொண்ட பயிற்சி ஒன்று இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. எவ்வளவு கடினமாகப் பணியை அவர்கள் பயிற்சியில் எடுக்கிறார்கள் என்பதை இதோ நீங்களே இந்த வீடியோவில் பாருங்களேன்.