பணக்கார குழந்தைக்கு தாயாகிப் போன ஏழை தொழிலாளி அம்மாக்கள்… இந்த முதலாளி அம்மாவுக்கு எவ்வளவு பெரிய மனசு பாருங்க…!

    அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களே இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம். 

        எப்போதுமே தாய்பாசத்துக்கு பணம்  பொருட்டாகவும், தடையாகவும் இருந்ததே கிடையாது. அதனால் தான் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா, ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா என பாடல் வைத்தார். அந்த அளவுக்கு தாய்பாசம் உயர்ந்தது. அதிலும் அம்மாக்கள் பணக்காரர்களாக இருந்துவிட்டால் தங்கள் குழந்தைகளை அதேபோல் தான் வளர்ப்பார்கள். ஏழை, எளிய மக்களோடு அவர்கள் பழகவும் விடமாட்டார்கள். ஆனால் அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, இங்கே ஒரு தாய் செய்த செயல் நெகிழ வைத்துள்ளது.

 அப்படி அவர் என்ன செய்தார் எனத் தெரிந்துக்கொள்ளத் தொடர்ந்து படியுங்கள். அந்த பணக்காரத் தாய்க்கு சொந்தமாக டீ எஸ்டேட் இருக்கிறது. அவரது எஸ்டேட்டில் ஏராளமான பெண்கள் வேலைசெய்து வருகின்றனர். அவர்கள் மத்தியில் தன் குழந்தையைக் கொண்டு செல்கிறார் அந்த பணக்காரப் பெண். துளிகூட பாகுபாடு காட்டாமல் தன் பணியாளர்களிடம் அந்தக் குழந்தையைக் கொடுக்கிறார்.

அவர்களும் அந்தக் குழந்தையை அள்ளி, அணைத்துக் கொள்கிறார்கள். இந்தத் தாய் மனசு யாருக்கும் வராது என்பதுபோல், இந்தக் குழந்தை அவர்களோடு இருக்கிறது. பணக்கார வீட்டுப்பெண் தன் குழந்தையைத் தன் டீ எஸ்டேட் தொழிலாளி பெண்களிடம் கொடுத்து உருகவைத்துள்ளார். இதோ நீங்களே சமத்துவம் தளைக்கும் இந்த இடத்தைப் பாருங்களேன். 

You may have missed