இரண்டே நிமிடத்தில் உங்கள் மஞ்சள்நிற பற்கள் வெண்மையாக மாறணுமா..? இதோ இதை மட்டும் செய்யுங்க..

teeth-whiteing-tamil-tips-salt-inji

சிலர் பொது இடத்தில் வாய் திறந்து சிரிக்கக்கூட தயக்கம் காட்டுவார்கள். காரணம், பற்களில் அந்த அளவுக்கு மஞ்சள்கரை ஏறி இருக்கும். அதை மிக சுலபாக இரண்டே நிமிடத்தில் போக்கிவிட முடியும். அதற்காக பல டாக்டரைத் தேடியெல்லாம் போக வேண்டிய அவசியமே இல்லை. அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா? தொடர்ந்து இதைப் படியுங்கள்.

இதற்கு தேவையான முக்கியப்பொருள் இஞ்சி. இதில் ஆண்டி பாக்டீரியல் இருக்கிறது. இது பல்லில் இருக்கும் துர்வாசனையையும் நீக்குகிறது. இதற்கு ஒரு சின்ன துண்டு இஞ்சியை எடுத்து, அதன் தோலை நீக்க வேண்டும். தொடர்ந்து அதை நைஸ் பேஸ்டாக்கி, அதனோடு ஒரு சிட்டிகை அளவுக்கு இந்துப்பு சேர்க்க வேண்டும்.

தொடர்ந்து இதனோடு ஒரு டீஸ்பூன் அளவுக்கு எழுமிச்சையை பிழிந்து ஊற்ற வேண்டும்.

இந்த எழுமிச்சையில் அதிகளவு சிட்ரிக் அமிலம் உள்ளது. இந்த மூன்றையும் நன்றாக கலக்கிக்கொண்டு உங்கள் மஞ்சள் கரை படிந்த பற்களின் மேல் தேய்க்க வேண்டும்.

இதை வாரத்துக்கு இருமுறை உங்கள் பல்லில் அப்ளை செய்தாலே உங்கள் பல்லில் இருக்கும் மஞ்சள் கரை போய்விடும். முயற்சித்துப் பாருங்கள் நண்பர்களே…

செய்முறை வீடியோ இணைப்பு கீழே…

You may have missed