அடடே சோறு கண்ட இடமே சொர்க்கம் என்னும் பழமொழிக்கு இதுதான் அர்த்தமா..? பலருக்கும் தெரியாத தகவல்..!

  நம் முன்னோர்கள் காலம், காலமாகச் சொல்லிவரும் பழமொழிகள் ஒவ்வொன்றின் பின்னாலும் மிகப்பெரிய வாழ்க்கைத் தத்துவம் உள்ளது. அந்தவகையில் பல பழமொழிகளும் பிரமிப்பூட்டுபவை. உதாரணமாக ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானாக வளரும் என ஒரு பழமொழி உண்டு.

  அதாவது தன் வீட்டுக்கு வரும் மருமகளை நல்லபடியாக பார்த்துக்கொண்டால் தன் மகள் வாக்குப்பட்டுப் போன இடத்தில் நன்றாக இருப்பார் என்பதுதான் இதன் அர்த்தம். இதேபோல் சோறு கண்ட இடமே சொர்க்கம் என்னும் வார்த்தையையும் பலரும் சொல்லக் கேட்டிருப்போம். அதன் உண்மையான அர்த்தம் தெரிந்தால் நீங்கள் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள். இதுகுறித்துத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

   பொதுவாகவே சிவபெருமானுக்கு ஐப்பசி பவுர்ணமி நாளில் வெள்ளை அன்னத்தால் அபிசேகம் செய்வது வழக்கம். இதைப் பார்த்தாலே சொர்க்கம் கிட்டும் என்பது சம்பிரதாயம். அதை மையமாக வைத்துத்தான் சோறு கண்ட இடம்(அதாவது அன்ன அபிஷேகம்) சொர்க்கம் என சொலவடை வந்தது. ஆனால் காலப்போக்கில் இது சாப்பாட்டு ராமன்களைக் குறிக்கும் வகையாக அது மாற்றப்பட்டுவிட்டது.

  கோயில்களில் அன்ன்னாபிஷேகம் செய்வதற்கு உணவு தயாரித்துக் கொண்டிருக்கும்போது மனதில் கெட்ட எண்ணமே இல்லாமல் செயல்பட வேண்டும். நம் மனதில் கெட்ட எண்ணத்தோடு சமைத்தால் இறைவனுக்கு அமுது படைப்பதிலேயே அர்த்தம் இல்லாமல் போய்விடும். அதனால் தான் ஆலயத்திற்கு உணவு சமைக்கும்போதும் இறை நினைப்போடு சமைக்கின்றனர். எது எப்படியோ, சோறு கண்ட இடமே சொர்க்கம் என்னும் பழமொழியின் நிஜ அர்த்தத்தை இன்று நீங்கள் புரிந்து கொண்டீர்கள் தானே? 

You may have missed