கோடி ரூபாய் கொடுத்தாலும் பார்க்க கிடைக்காத அதிசயம்… இயற்கை நிகழ்த்திய ஆச்சர்யம்… மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி..!


இயற்கையை மிஞ்சிய சக்தியும், அதிசயமும் எதுவுமே இல்லை என்பார்கள். இயற்கைதான் எல்லாவற்றைவிடவும் முன்னோடி. என்ன தான் நாம் காலப்போக்கில் அனைவரும் வியக்கும்வண்ணம் பல கட்டிடங்களையும், கட்டுமானங்களையும் எழுப்பினாலும் இயற்கையின் அதிசயம் காணக்கிடைக்காதது.

அப்படித்தான் இங்கேயும் ஒரு அதிசயம் நடந்துள்ளது. மலைதொடர் ஒன்றில் தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. அப்படி என்ன நடந்தது என்கிறீர்களா? நண்பர்கள் கூட்டமாக மலைக்கு சுற்றுலா சென்றனர். அந்த மலையில் ஒரு அருவி இருக்கிறது. அது வறண்டு, காய்ந்து போய் கிடக்கிறது. ஆனால் கண் இமைக்கும் நொடியில் திடீரென எங்கிருந்தோ வந்த தண்ணீர் அதில் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

மலைப்பகுதியான அங்கு வேறு ஒரு இடத்தில் கனமழை பெய்துள்ளது. அந்தத் தண்ணீர் மலைப்பகுதியில் ஓடிவந்து, திடீரென அருவியில் கொட்டியுள்ளது. நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்கு மிகவும் பிரமிப்பையூட்டும்வகையில் இந்தக் காட்சி உள்ளது. துளிகூட நீர் இன்றி வறண்டுபோய் இருக்கும் அருவியில் நொடிப்பொழுதில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.