குப்புறப்படுத்து தூங்குவதில் இவ்வளவு ஆபத்தா..? இதைப் படித்து பாருங்க புரியும்…!

தூங்குவதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையை பின்பற்றுவார்கள். சில பேர் நிமிர்ந்து படுத்துதான் தூங்குவார்கள். சிலர் குப்புறப்படுத்தும், சிலர் ஒருபக்கமாய் திரும்பியும் தூங்குவதைப் பார்த்திருப்போம். அதில் குப்புறப்படுத்து தூங்குவது மிகப்பெரிய உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். இதைப்பற்றித் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

குப்புறப்படுத்து தூங்குவதால் வயிற்றில் உள்ள உறுப்புகள் பாதிக்கும். பெரியவர்களுக்கு இதனால் பெரிய அளவில் ஆபத்து இல்லையென்றாலும் இது முகுதுவலி உள்ளோரை படுத்தி எடுத்துவிடும். அப்படி குப்புறப்படுத்தால்தான் தூக்கம்வரும் என்பவர்கள், வயிற்றுக்கு அடியில் ஒரு தலையணை வைத்து படுத்தால் முதுகில் உண்டாகும் அழுத்தம் தடுக்கப்படும்.

இதேபோல் ஒருக்களித்து படுப்பவர்கள் கால்களை மடக்கி நெஞ்சுக்கு அருகில் குறுக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு இருகால்களுக்கு நடுவே தலையணை வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் முதுகுப்பகுதிக்கு சிரமம் வராது. அதேநேரம் நேராக முதுகுபடும்படி படுத்தால் தலையணையை முட்டுக்கு அடியில் வைக்க வேண்டும்.

எது எப்படியோ உங்களுக்கு முதுகுவலி இருந்தால் ஆரம்பநிலையிலேயே மருத்துவரிடம் காட்டி சரி செய்து விடவேண்டும். இல்லையென்றால் முதுகெழும்பு தேய்மானம் ஆகவும் வாய்ப்புண்டு.