முதன் முதலாக தம்பியை கையில் வாங்கிய அக்கா.. உருக வைக்கும் உணர்ச்சி பெருக்கான வீடீயோ மிஸ் பண்ணிடாதீங்க…!

உலகில் மிகப்பெரிய வலிமையுள்ள விசயம் என்ன தெரியுமா ‘பாசம்’. அதில் அக்கா, தம்பி பாசம் என்பது வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.

தன் தாய் வயிற்றில் கருவை சுமக்கும் போதே, முதல் குழந்தையாக இருக்கும் பெண் குழந்தை தம்பியின் வரவுக்கு துள்ளித் துடிப்பாள். பல இல்லங்களில் தம்பி பாப்பாக்களுக்கு இரண்டாவது தாயாகவே மாறி இருப்பாள் அக்கா. பள்ளிக் கூடத்துக்கு கையை பிடித்து அழைத்துச் செல்வது, காலையில் குளிப்பாட்டி, டிரஸ் செய்து விடுவது என தம்பிகளின் அழகிய பொழுதுகளில் அக்காக்களின் கைவண்ணமும் இருக்கும். அதனால் தான் மணம் முடிந்த பின்னர் தன் கணவர் இல்லத்துக்கு செல்லும் அக்காக்களை பிரிய முடியாமல் ஓவென்று அழுகின்றனர் தம்பிகள்.

இங்கும் அப்படித்தான். இந்த சிறுமியின் தாய் இரண்டாவதாக கருவுற்றாள். ஆண் குழந்தை பிறந்தது. சிறுமி அக்கா ஆகிவிட்டாள். பிரசவம் முடிந்து தாயிடம் இருந்து குழந்தை எடுத்து வரப்பட்டு அவளது அக்காவிடம் முதன் முதலாக கொடுக்கப்படுகிறது. குழந்தையின் தலையில் முத்தம் கொடுக்கும் அக்காவின் கண்கள் குளமாகிப் போகிறது.

குழந்தை அசதியில் கொட்டாவி விட, வைத்த கண் எடுக்காமல் தன் சகோதரனை பார்த்து ரசிக்கிறாள் சிறுமி. குழந்தை லேசாக அழத் தொடங்கியதும், சிறுமியின் முகம் மாறுகிறது. குழந்தையின் கால்களை வருடிவிட்டு மீண்டும் தலையில் முத்தம் இடுகிறாள். குழந்தையை பார்த்து, பார்த்து ஆனந்த கண்ணீர் விடுகிறாள். பட்டு போன்ற கால்களை வருடி ஆனந்தம் அடைகிறாள்.

அக்காக்களால் சூழ்ந்த உலகு எவ்வளவு பேரழகு? வீடியோ கீழே உள்ளது. பாருங்களேன்.

You may have missed